யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (16) மாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இந்திய குழுவைப் படகுகளினால் தொடரும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை சங்கங்களின் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
இப்பிரச்சினை தொடர்பில் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவதானஞ் செலுத்தப்பட்டது.
மேலும் வான் அகழ்வு அணை கட்டுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) அவர்களும் கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக