//]]>3

திங்கள், 16 ஏப்ரல், 2012

கைவிடப்பட்ட 2 வயதுக் குழந்ததை




கல்முனை பொலிஸாரின் உதவியுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுமார் நான்கு மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தையொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.


கல்முனை பஸ் தரிப்பிடத்தில் நின்ற அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் குறித்த குழந்தையை வைத்திருக்குமாறு அங்கிருந்த மற்றுமொறு பெண்ணிடம் கொடுத்துவிட்டு நீண்ட நேரம் திரும்பி வராததன் காரணமாக, குழந்தை பொலிஸார் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.



இந்தக் குழந்தை தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்துள்ளார்.



இதேவேளை குறித்த குழந்தையினை சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் கல்முனை அலுவலக பொறுப்பதிகாரி இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக