- குமாரவடிவேல் குருபரன்
• இலங்கையின் 1978 அரசியல் அமைப்பானது ஒற்றையாட்சி முறைக்குரியது. ஒற்றையாட்சி முறையொன்றின் கீழ் மத்திய சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை அதிகாரங்கள் பாரதீனப்படுத்தப்பட முடியாதவை பகிர்ந்தளிக்கப்பட முடியாதவை.
• ஓற்றையாட்சி முறையை மாற்றுவதற்கு மக்களிடம் தேர்தல் (ஒப்பங்கோடல்) மூலம் சம்மதம் வாங்கவேண்டும். அரசியல் அமைப்புக்குச் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தி;னூடாக மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. இலங்கையின் உயர் நீதிமன்றம் மாகாண சபை முறைமை ஒற்றையாட்சியை மீறவில்லை எனவும், எனவே 13ஆவது திருத்தத்திற்கு மக்கள் சம்மதம் தேவையில்லை எனவும் தீர்மானித்தது.
மாகாண சபையின் சட்டவாக்க அதிகாரம்
• மாகாண சபை சட்டமியற்றக்கூடிய விடயங்கள் மாகாண சபை நிரலில் உள்ளன.
• மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றக்கூடிய விடயங்கள் மத்திய நிரலில் உள்ளன.
• மாகாண சபையும் பாராளுமன்றமும் இணைந்து சட்டமியற்றக்கூடிய விடயங்கள் ஒருங்கிய நிரலில் உள்ளன.
• ஆனால் ஒருங்கிய நிரல் தொடர்பில் மத்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டம் மாகாண சபை சட்டத்திலும் மீயுயர்வானது.(இதன் காரணமாக நடைமுறையில் ஒருங்கிய நிரலும் மத்திய அரசாங்கத்திற்குரியதே).
• இந்நிரல்களுள் ஏதேனும் விடயம் ஒதுக்கப்படாதவிடத்து அவ்விடயமும் மத்திய அரசின் நிரலுக்குட்பட்ட விடயமாகவே கருத வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாகாண சபையின் சட்டவாக்க அதிகாரத்திற்குள்ளான தலையீடுகள்.
1. தேசிய கொள்கை உருவாக்கம் என்ற பெயரில் எவ்விடயம் தொடர்பிலும் (மாகாண சபை நிரல் விடயங்கள் உட்பட) மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றலாம். வெறுமனே ஓர் அமைச்சுச் சுற்றுநிருபம் மூலம் கூட
தேசிய கொள்கையை உருவாக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளது.
2. மாகாண சபை நிரலில் உள்ள எவ்விடயம் தொடர்பிலும் பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் சட்டமியற்றலாம்.
3. அவசர கால சட்டமொன்றின் மூலமாக மாகாண சபை நிரலில் உள்ள எவ்விடயம் தொடர்பிலும் சட்டமியற்றலாம் மாகாணசபைக் சட்டமொன்றை வலிதற்றதாக்கலாம்.
4. மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்கள் கூட அரைகுறையாகவே வழங்கப்பட்டுள்ளனஉதாரணமாக சுகாதாரம் மாகாணசபை நிரலிற்குள் உள்ளடக்கப்பட்டாலும் போதனா வைத்தியசாலைகள் மத்தியின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இயங்கும். மருந்துகளை வாங்கும் அதிகாரமும் மத்திக்கே உரியதாகும். பாடசாலைகள் மாகாணசபை நிரலிற்குள் உள்ளடக்கப்பட்டாலும் தேசிய பாடசாலகள் தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்தினாலேயே பரிபாலிக்கப்படும்.
5. மாகாணசபைக்கு குறித்தொதுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாகாணசபை ‘பாராளுமன்றத்தினால் சட்டமொன்றின் மூலமாக வழங்கப்படும் கட்;டுப்பாடுகளிற்கு உட்பட்டு’ சட்டமியற்றலாம்என்ற வாசகம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக கடன் வாங்குதல் சூழல் பராமரிப்பு கனியவள விருத்தி (பெரும்பாலான முக்கியமான) வரிவிதிப்பு. ஆகவே இவை ‘மாகாண விடயங்களாக இருந்தாலும் இவை தொடர்பில் பாராளுமன்றம் சட்டவாக்கம் செய்யலாம்;.
மாகாண நிறைவேற்றுத்துறை - ஆளுநரின் அதிகாரங்கள்
ஆளுநர் தனது அதிகாரங்களை நேரடியாகவோ மாகாண அமைச்சரவையின் மூலமாகவோ தனக்கு கீழ்வரும் அதிகாரிகள் மூலமாகவோ செயற்படுத்தலாம்
ஆளுநரானவர் அரசியலமைப்பினால் தனது தற்றுணிவின் பிரகாரம் செயலாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் முதலமைச்சர்ஃ மாகாண அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் நடந்து கொள்ளவேண்டும்.
தனது தற்றுணிவின் கீழ் உள்ள அதிகாரங்கள் எவை எனத் தீர்மானிக்கும் தற்றுணிவு அதிகாரம் ஆளுநருக்குண்டு.
மாகாண சபையின் பொது உத்தியோகஸ்தர்கள் அனைவரையும் நியமிக்கும் இடம்மாற்றும் பதவி விலக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆளுநரிடத்து வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் விரும்பினால் இவ்வதிகாரங்களை மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு கையளிக்கலாம். ஆளுநரே மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை (மூவர்) நியமிப்பார்
மாகாண சபையில் நிதி சம்பந்தமான எந்த மசோதாவையும் ஆளுநரின் பரிந்துரையின்றி அறிமுகப்படுத்த முடியாது.
மாகாண நிதியத்திலிருந்து செலவீனத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு மசோதாவும் ஆளுநரின் பரிந்துரையின்றி அறிமுகப்படுத்த முடியாது.
மாகாண சபையால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரத்தை ஆளுநர் (மத்தியில் அரசாங்கத்தின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கும்) பிரதேச செயலாளர்களிடம் வழங்கலாம்.
அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறியமைக்காக, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டொன்றின் பெயரில் அல்லது ஒழுக்கக் குறைவான நடத்தைக்காக மாகாண சபை 2/3 பெரும்பான்மையுடன் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநரை நீக்குமாறு பரிந்துரைக்கலாம். ஆனால் இவ்விடயத்தில சனாதிபதியின் முடிவே இறுதியானதாகும்.
காணி அதிகாரங்கள்
• ஒரு மாகாணத்திற்குட்பட்ட அரச காணியை குடிமகன் ஒருவருக்கு பாரதீனப்படுத்தும் அதிகாரம் சனாதிபதியிடத்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தை அவர் மாகாண சபைகளோடு கலந்தாலோசித்ததன் பின்னர் (சம்மதத்துடன் அல்ல) இயற்றப்பட்ட (மத்திய பாராளுமன்றத்தினுடைய) சட்டங்களின் பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
• மாகாணங்களுக்கிடையிலான நீர்பாசன காணி அபிவிருத்தி திட்டங்கள் மத்திய அரசாங்கத்தினுடைய பொறுப்பாகும். யாருக்கு அத்திட்டங்களின் கீழ் காணியை வழங்கலாம் என்பது இலங்கை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும்.
• இவ்வாறாகக் காணி பகிர்ந்தளிக்கப்படும் போது தேசிய இன விகிதாசாரத்திற்கேற்ப வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ)
• இவ்வாறாக வழங்கப்படுகின்ற காணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாவனைக்குட்படுத்த வேண்டும். அவ்வாறாக அவர்கள் பாவனைக்குட்படுத்தத் தவறும் போது வேறோர் திட்டத்தின் கீழ் அச்சமூகத்திற்குக் பங்கு ஒதுக்கப்படுவது கருதப்படும்.
• மேற்கண்டவாறு இயன்றவரை ஒரு மாகாணத்தின் (இனக்) குடிப்பரம்பலைப் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளப்படவேண்டும்.
(ஆ) ------ (அ) விற்கும் (ஆ) விற்கும் உள்ள முரண்பாட்டை அவதானிக்கவும்.
• இவ்வாறான திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை வகுப்பது மத்திய அரசாங்கம் என்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது மாகாண அரசாங்கம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. வேறோர் இடத்தில் இத்திட்டங்களின் நிர்வாகமும் முகாமையும் இலங்கை அரசாங்கத்திடம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதன் விளைவாகத் தோன்றும் முரண்பாட்டையும் அவதானிக்குக.
• காணிப்பாவனை தொடர்பான தேசிய கொள்கை உருவாக்கத்திற்காக தேசிய காணி ஆணைக்குழு பற்றி 13ஆவது திருத்தம் பேசுகின்றது. எல்லா மாகாணங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இவ்வாணைக்குழுவில் இடம்பெறுவர். (வடக்கு கிழக்கு மாகாணத்திலுருந்து இரண்டு பிரதிநிதிகள் இவ்வாணைக்குழுவில் இடம்பெறுவர் - சிறுபான்மையராகவே இருப்பர் - என்பதனை அவதானிக்குக)
பொலிஸ் அதிகாரங்கள்
5 - 10 மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவால் நியமிக்கப்படுவர். மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் DIGயின் பிரதிநிதி ஒருவர், சனாதிபதியின் ஆலோசனையின் பெயரில் நியமிக்கப்படும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் பிரதிநிதி ஒருவர், முதலமைச்சரின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் இடம்பெறுவர்.
மாகாணத்தின் DIG மாகாண முதலமைச்சரின் சம்மதத்தோடு IGPயால் நியமிக்கப்படுவார்
IGPக்கும் முதலமைச்சருக்கும் கருத்தொற்றுமை இல்லாவிடில் சனாதிபதி இந்நியமனத்தை மாகாண முதலமைச்சரோடு கலந்தாலோசித்ததன் பின்னர் தான் விரும்பும் ஒருவரை DIGயாக நியமிப்பார்.
தேசிய பொலிஸால் மட்டும் விசாரிக்கப்படக்கூடிய குற்றங்கள் சிறப்பாகக் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. இவை முக்கியமான குற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்குகின்றன.