//]]>3

சனி, 26 மே, 2012

முதலிடத்தில் கூகுலின் குறோம்!



உலகம் முழுதும் எடுக்கப்பட்ட கணக்கின்படி கூகுள் குரோம் பயனாளர்கள் விகிதம் 32.5% ஆகவும் இன்டெர்னெட் எக்ஸ்புளோரர் பயனாளர்கள் விகிதம் 32.1%ஆகவும் இருந்தது.
டிசம்பர் 2011-இல் கூகுள் குரோம், ஃபயர்ஃபாக்ஸை முந்தியது ஆனால் எக்ஸ்புளோரரைவிட குறைவாகவே இருந்தது.
வார இறுதிகளில் கூகுள் குரோம் பயனாளர்கள் அதிகரித்தனர் என்பது தெரியவந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் கூகுள் குரோம் பயனாளர்கள் எண்ணிக்கை எக்ஸ்புளொரரை மிஞ்சியுள்ளது.
புகழ் பெற்ற வெப் ஆய்வு நிறுவனமான ஸ்டேட்கவுண்டர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆனாலும் நாடு ரீதியாகப் பார்க்கும்போது முடிவுகள் மாறியுள்ளன. உதாரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் பயனாளர்கள் பெரிதும் எக்ஸ்புளோரர் பிரவுசர்களையே விரும்புகின்றனர்.
குரோமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் அதிகம் என்று கூறியுள்ளது இந்தப் புள்ளிவிவரம். ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் குரோம் முன்னிலை வகிக்கிறது. அதாவது மோசில்லா ஃபயர்ஃபாக்ஸைக் காட்டிலும் குரோம் பயன்பாடு அதிகம்.
மற்றபடி ஜப்பான், சீனா, தென் கொரியா, ஆகிய நாடுகளில் இன்டெர்னெட் எக்ஸ்புளோரரே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக