ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை யாகிய சரத் பொன்சேகா வடபகுதி யின் சிவில் நிர்வாகத்தில் இராணு வத்தினர் தலையிடுவதாக தமிழ் பத்திரிகையொன்றுக்கு கூறியிருக்கும் கருத்து வெளிநாடுகளின் தலையீடு களை அவர் வலியுறுத்துவதை காட்டு வதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒரு விபத்தினால் காயம் அடைந்த பின்னர் அங்கு 4 மாத காலம் சிகிச்சை பெற்று இப்போது குணமாகி இருக்கும் ன ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வியாழக்கிழமை இரவு நாடு திரும்பினார். கொழும்பில் உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் செய்தி நிருபர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
சரத் பொன்சேகா பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல- ஜனாதிபதி அளித்த மன்னிப்பின் மூலம் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கும் சரத் பொன்சேகா தன்னுடைய உண்மை நிலைப்பாட்டை மறந்து விட்டு- ஜனாதிபதி அவர்கள் அளித்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு சரத் பொன்சேகா வெளிநாட்டில் உள்ளவர்களை தலையிடுமாறு அழைத்தது தவறான செயல் என்றும் இப்போது அவர் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் கைப்பாவையாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என்றும் கூறினார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு ஒரு தோல்வி அல்ல என்றும்- ராஜதந்திர மட்டத்தில் இவ்விதம் தோல்விகள்- வெற்றிகள் மாறி மாறி வரும் என்றும் சொன்னார்.
தகவல்-அரசாங்க தகவல் திணைக்களம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக