//]]>3

சனி, 26 மே, 2012

5.1 பில்லியன் ரூபாவை இலாபம் பெற்ற சிகரட் நிறுவனங்கள்



2010 ஆண்டு வடகிழக்கில் 5.1 பில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ளதாக புகையிலை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் புகைத்தல் மற்றும் மது விற்பனை பெரிதும் அதிகரித்துள்ளதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு துண்டு பிரசுரங்களையும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் செய்து வருகின்றது.
புகைத்தலால் பல்வேறு நோய்த்தாக்கங்கள் ஏற்படுமென பிரசாரங்கள் செய்யப்ட்டு வருகின்ற போதிலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு புள்ளி விபரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கில் நிலவும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தம் புகையிலை விற்பனை நிறுவனங்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி இளைஞர்களையும் சிறுவர்களையும் புகைத்தலுக்கு அடிமையாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு இம்மாதம் 31 திகதி தொடக்கம் ஜீன் மாதம் 16 திகதி வரை புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினங்களாக அனுஸ்ட்டிக்கவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக