//]]>3

சனி, 26 மே, 2012

ஐ,நா இலங்கையை ஆராய புதிய குழு!



ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் காரியாலயத்தின் ஊடாக இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக 3 நாடுகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மனிதவுரிமைகள் ஆணையகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், எதிர்வரும் ஒக்டோபர் 22 ம் திகதியிலிருந்து நவம்பர் 5 ம் திகதி வரை இடம்பெறுவுள்ள ஆய்வு குழு கூட்டங்களின் போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியா, ஆபிரிக்காவின் பெனின் ராஜ்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளே நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த மூன்று நாடுகளும் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க அறிக்கைக்கு ஆதரவளித்து வாக்களித்திருந்தன.

இதனிடையே, மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் பதவிகாலம் மேலும் 2 வருடங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர் இஸ்ரேலை விமர்சித்ததால் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட எதிர்ப்பையும் கவனத்தில் கொள்ளாது அவரது பதவிகாலம் நீடிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக