//]]>3

வெள்ளி, 1 ஜூன், 2012

யாழ் நகர எல்லைக்குள் இருக்கும் விடுதிகளுக்குள் மூடு விளா



யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட உரிமம் பெறாத சகல விடுதிகளும் எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இயங்கி வரும் அனைத்து விடுதிகளையும் பதிவு செய்யுமாறு மாநகர சபையினால் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த அறிவித்தலின் பின்னர் இன்னமும் பதிவு செய்யப்படாத அல்லது பதிவினை மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்காத சகல விடுதிகளும் மூடப்படவுள்ளதாக மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து உள்ளுராட்சி சட்டத்திற்கமைவாக உரிமம் பெறாத அனைத்து விடுதிகளும் மூடப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஓர் பெண்ணிடம் எப்படி ஆண் ஏமாந்து போகிறான்

பல ஆண்கள் ஒரே நேரத்தில் ஓர் பெண்ணிடம் ஏமாந்து போகிறார்கள். அதுவும் இலத்திரனியலால். எப்படி?

சம்சுங் நிறுவனம் கை அசைவுகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிமோட் மூலம் செய்யும் வேலைகளை, வித விதமான கை அசைவுகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம்.
அத் தொலைக்காட்சிக்கு எடுக்கப்பட்ட வர்த்தக விளம்பரப்படம் தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
Motion Control தொழில்நுட்பம் பயன்பட்டுள்ள இவ் ஸ்மார்ட் தொலைக்காட்சியில் இணைய இணைப்பை பயன்படுத்தி யூடியூப் முதல் ஸ்கைப் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.




திருமணத்திற்கு தடையான யாதகம்



பொதுவாக திருமணத்திற்கு குருப் பலன் இருந்தால் நல்லது என்று சொல்கிறோம். ஏனென்றால் குருவருள் திருவருள் என்று சொல்லப்படுகிறது. நல்ல தசா புத்தி இருந்தாலும் திருமணம் முடிக்கலாம். அதில் பிரச்சனை இல்லை. 
சாதாரணமாக சனி திசை, ஏழரை சனி என இரண்டும் நடக்கும் போது தவிர்க்கலாம். அடுத்து ஏழரைச் சனி நடக்கும் போது இராகு திசை நடந்தாலும் தவிர்க்கலாம். இதேபோல, ஏழரைச் சனி நடக்கும் போது கேது திசை நடந்தாலும் திருமணத்தை தவிர்க்கலாம். 
இதெல்லாம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒரு த்ரில்லிங்காக இருக்கக்கூடிய காலகட்டம். எப்ப வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தலைக்கு மேலே கத்தி இருப்பது போன்ற காலகட்டம். ஆனாலும், இதனையும் முறியடிக்கும் விதமான பெண்ணினுடைய ஜாதகமோ அல்லது துணையினுடைய ஜாதகமோ நல்ல திசையுடன் யோக திசையுடன் இருந்தால் அதனைக் கூட சேர்த்து வைப்போம். 
வரன் பார்க்கிற ஒரு பையனுக்கு இராகு திசையும், ஏழரைச் சனியும் ஒன்றாக நடக்கிறது என்று வேண்டாம் என்று சொல்வோம். அதுவே, பெண்ணிற்கு சுக்ர திசை, குரு திசை இருந்தால் அது சமன் செய்யப்படும். அதுபோல ஜாதகம் வரும் வரை காத்திருந்து பொருத்தம் பார்த்து திருமணம் முடிக்கலாம் என்று சொல்கிறோம்.

பேஸ் புக்கால் அம்மாவாகும் 15 சிறுமி



பேஸ் புக் இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவரைக் கர்ப்பமடையச் செய்த குற்றச்சாட்டில் அமெரிக்க அட்லாண்டாவைச் சேர்ந்த 41 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தோனி அந்தோனியோ நோர்மன் என்ற மேற்படி நபர், தன்னை 25 வயது இளைஞர் எனக் குறிப்பிட்டு குறிப்பிட்ட சிறுமியுடன் பேஸ்புக் இணையத் தளத்தின் அரட்டைப் பகுதியினூடாக தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் பின் சிறுமியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்த நோர்மன் அவரது வீட்டு விலாசத்தைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மபிள்டன் நகரிலுள்ள சிறுமியின் வீட்டிற்கு சிறுமி தனித்திருந்த போது வந்த நோர்மன், சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பில் பொலிசாரிடம் சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிசார் நோர்மனைக் கைது செய்துள்ளனர்.
அவர் மீது பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம், சிறுமி ஒருவரிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்டமை உள்ளடங்கலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. __

விபச்சார விடுதியில்6 பெண்க கைது


கல்கிஸ்சை கரையோரப் பிரதேசத்தில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். பிரபல பாடசாலை ஒன்று அருகில் இயங்கி வந்த இந்த மையத்தில் இருந்து 6 பெண்களையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
25 முதல் 35 வரையிலான 35 வயதெல்லையில் இருந்தத வத்தளை, மொரட்டுவ, இம்புல்கொட, களனி, பியகம பிரதேசங்களை சேர்ந்த பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பெண்கள் நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபா வரை விற்கப்படுவதாகவும், இந்த விடுதியை நிர்வகித்துவந்த கட்டடதிற்கு நாளொன்றுக்கான வாடகை 8 ஆயிரம் ரூபா எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விடுதியை நிர்வகித்து வந்தவர்கள் குறித்தும், அவர்களுக்கு திரைமறைவிலுள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நொக்கியாவினை கையடக்கத்தொலைபேசியை பேஸ்புக்வாங்குகிறது



பேஸ்புக் பெயரிலான கையடக்கத்தொலைபேசி தொடர்பான செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகின்றது.
இது தொடர்பாக சில வருடங்களுக்கு முன்னரே செய்திகள் அடிபட்ட போதிலும் அவை நிஜமாகவில்லை.
இந்நிலையில் தற்போதும் பேஸ்புக் கையடக்கத்தொலைபேசி தொடர்பாக பலராலும் பேசப்பட்டுவருகின்றது.
சிறப்பான மொபைல் பேஸ்புக் அனுபவத்தினைத் தரும் வகையில் தனது பெயரிலேயே கையடக்கத்தொலைபேசி தயாரிக்கும் நோக்குடன் அப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலரைப் பணிக்கமர்த்தியுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேபோல தற்போதும் சுவாரஸ்யமான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
சந்தையில் தனது இடத்தினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் நொக்கியாவினை பேஸ்புக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அதனுடன் இணைந்து பேஸ்புக் கையடக்கத்தொலைபேசி தயாரிக்கவுள்ளதாகவுமே செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நொக்கியாவைப் பேஸ்புக் விலைபேசியுள்ளதாகவும், நொக்கியாவின் அனுபவம் மற்றும் சிறப்புத்தேர்ச்சியை பேஸ்புக் உபயோகிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நொக்கியா மைக்ரோசொப்ட்டுடன் சிறந்த உறவினைப் பேணிவருவதனால் பேஸ்புக் பேரிலே விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி ஒன்றினைப் பேஸ்புக் தயாரிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகவுள்ளன.
கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பேஸ்புக் பாவனை அதிகரித்து வருகின்றமையால் அவற்றில் காட்சிப்படுத்தும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைவாகும். இவ்விடயம் தொடர்பில் பேஸ்புக் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது. மேலும் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசம் சறுக்கியது நாம் அறிந்த விடயமே.
இவற்றிலிருந்து மீளவும் வருவாய் தரக்கூடிய மார்க்கங்களை அதிகரிப்பதுவும் தற்போது பேஸ்புக்கின் முக்கிய குறிக்கோள்களாக உள்ளதுடன் அதற்கான மாற்று வியூகங்களை வகுப்பதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
இத்தகைய காரணிகளைக் கருத்தில்கொள்ளும் போது பேஸ்புக் தனது பெயரிலான கையடக்கத்தொலைபேசியைத் தயாரிப்பதும், அதற்கென உறுதியான பங்காளரொருவருடன் கைகோர்ப்பதும் சாத்தியப்படக்கூடிய விடயங்களாகவே தெரிகின்றன.
பேஸ்புக்கிற்கு என்றுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அதன் கையடக்கத்தொலைபேசிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனாலும் நொக்கியா போன்றதொரு நிறுவனத்தினை அவ்வளவு இலகுவாகக் கொள்வனவு செய்ய முடியுமா என்பது சற்று சந்தேகத்துக்குரிய விடயமே!

இலங்கைத்தீவு தமிழர் தேசம் சிங்களவர் தான் வந்தேறு குடிகள்



இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.
சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு: எல்லாவல மேதானந்த தேரர் ஒரு கல்விமானாக இருந்துகொண்டும், வரலாறு தெரிந்தும் சிங்கள மக்களைக் குஷிப்படுத்துவதற்கு போலிக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இதுதான் வரலாறு இதிகாசம் என்றும் சுட்டிக் காட்டுகின்றார். இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும்.
விஜய மன்னன் இங்கு வந்த பின்னர்தான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.
அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார். பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது.
எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் எல்லாவல மேதானந்த தேரர் இது விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்குத் தயாரா?அவர் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன்.
இப்படித் தெரிவித்தார் நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுபினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.