//]]>3

வியாழன், 7 ஜூன், 2012

வாலு ரெயிறலர் வெளியிடப்பட்டது video


சகுனம் தொடர்பில் தீர்மானிப்பதில் தேங்காய் முக்கிய இடம் வகிக்கிறது. நம்மை நாமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் அர்த்தமாகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
இந்தத் தேங்காய் உடையும் விதத்தில் சகுன ஜோதிடம் பல விடயங்களை உணர்த்துகிறது. தேங்காயின் ஓடு மட்டும் தனியாக வந்தால், சம்பந்தப்பட்டவருக்கு உடனடியாக பொருள் நஷ்டம் உண்டு என்று அர்த்தம்.
ஒருவேளை தேங்காய் அழுகியிருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு, நோய் ஏற்படும். குறிப்பாக தேங்காய் அழுகியுள்ள சதவீதத்திற்கு ஏற்ப அவரது உடலில் பாதிப்பு ஏற்படும் என சகுன ஜோதிடம் கூறுகிறது.
இதேபோல் அழுகியுள்ள பகுதியின் சதவீதத்திற்கு ஏற்ப பாதிப்பு ஏற்படும் நாள் தொலைவில் உள்ளதா? அருகில் உள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தேங்காய் அழுகினால் ஒரு சிலருக்கு உடனடி மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.


முகூர்த்த தேங்காயின் குணங்கசள்



சகுனம் தொடர்பில் தீர்மானிப்பதில் தேங்காய் முக்கிய இடம் வகிக்கிறது. நம்மை நாமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் அர்த்தமாகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
இந்தத் தேங்காய் உடையும் விதத்தில் சகுன ஜோதிடம் பல விடயங்களை உணர்த்துகிறது. தேங்காயின் ஓடு மட்டும் தனியாக வந்தால், சம்பந்தப்பட்டவருக்கு உடனடியாக பொருள் நஷ்டம் உண்டு என்று அர்த்தம்.
ஒருவேளை தேங்காய் அழுகியிருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு, நோய் ஏற்படும். குறிப்பாக தேங்காய் அழுகியுள்ள சதவீதத்திற்கு ஏற்ப அவரது உடலில் பாதிப்பு ஏற்படும் என சகுன ஜோதிடம் கூறுகிறது.
இதேபோல் அழுகியுள்ள பகுதியின் சதவீதத்திற்கு ஏற்ப பாதிப்பு ஏற்படும் நாள் தொலைவில் உள்ளதா? அருகில் உள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தேங்காய் அழுகினால் ஒரு சிலருக்கு உடனடி மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Facebook இன்னும் 8 ஆண்டுகளில் பெட்டிக்குள் போகும்




முன்னனி சமூக வலைத்தளமான பேஸ் புக் இன்னும் ஐந்து தொடங்கம் எட்டு வரையான ஆண்டு காலப்பகுதியில் வழக்கொழிந்து இல்லாமல் போகுமென பொருளாதார ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கின் பங்குகள் சரிவதைத் தொடர்ந்து, 5-8 ஆண்டுகளில் அது “காணாமல்போகும்” என்று நிதி பாதுகாப்பு ஆய்வாளரான எரிக் ஜாக்சன் கணித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கை மொபைலில் பயன்படுத்துவதால், ஃபேஸ்புக்கிற்கு வருவாய் இழப்பு எற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத் தடைகளை மீறி ஃபேஸ்புக் சாதிக்குமா? இல்லை யாகூ போன்று மெல்ல சாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

20 வயதிலேயே பிஎம்டபிள்யூ கார் வாங்கிய கன்சிகா



ஒகே ஒகே மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள ஹன்ஷிகா தனது சம்பளத்தை ரூ.45 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி விட்டார்.

சம்பளத்தை உயர்த்திய கையோடு தனது அஸ்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும் விதமாக புதிய பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கியுள்ளார்.

நான் 20 வயதிலேயே பிஎம்டபிள்யூ கார் வாங்கிவிட்டேன் என்று நண்பர்களிடமும் சினிமா வட்டாரத்திலும் பெருமைப்பட்டிருக்கிறார் நம்ம மொளுக் மொளுக் ஹன்ஷி.

அவரின் காரின் விலையான 60 இலட்சத்தையும் சேர்த்து பெருமைப்பட்டு கொண்டதால் தற்போது வருமான வரித்துரையினரின் சந்தேக பார்வைக்குள் ஹன்ஷிகா சிக்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகை அனுஷ்கா பென்ஸ் கார் வாங்கிய சில நாட்களிலேயே வருமான வரித்துறையின் ரெய்ட்டுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை



பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட நாளுக்கான சம்பள பணத்தை வழங்காதிருக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இத்தகவலை உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் அவர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சினையை பணி நிறுத்தம் செய்து தீர்க்க முடியாது என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்று (06.06.2012) தொடக்கம் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 90 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்முறை



இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் இடையில் ஒரு பெண், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறாள் எனினும் அரசியல் செல்வாக்கு நீதிக்குத் தடையாக உள்ளதால் பொலிஸாரால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று சோசலிசப் பெண்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சோசலிசப் பெண்கள் அமைப்பின் தலைவி சமன்மாலி குணசிங்க நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பெலவத்த ஜே.வி. பி. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுதந்திர பொருளாதாரக் கொள்கையே இந்த நிலைமைக்குக் காரணம். எந்த ஒரு விடயத்தையும் பணம் தீர்மானிக்கும் நிலையே நாட்டில் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் அறிக்கைகளின்படி நாளொன்றுக்கு 5 பாலியல் ரீதியிலான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகிறது. எனினும் உண்மையில் நாளொன்றுக்கு 15 சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

1990 ஆம் ஆண்டு 665 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும் 2011 ஆம் ஆண்டு 1636 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றினால் பாதிக்கப்பட்ட 89 வீதமானோர் 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என்று சமன்மாலி குறிப்பிட்டார்.

யாழில் கள்ளச்சாராயம் வித்த நால்வர் கைது



யாழ். நகரப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நடைபாதை வியாபாரிகள் நால்வர் இன்றைய தினம் யாழ். காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்றுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். காவற்றுறையினர் சிவில் உடையில் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு
அவர்களிடமிருந்து 20 போத்தல் சாராயமும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்வர்கள் யாழ். காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவர்கள் நால்வரும் நாளையதினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளநர்.