//]]>3

வியாழன், 7 ஜூன், 2012

இலங்கையில் 90 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்முறை



இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் இடையில் ஒரு பெண், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறாள் எனினும் அரசியல் செல்வாக்கு நீதிக்குத் தடையாக உள்ளதால் பொலிஸாரால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று சோசலிசப் பெண்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சோசலிசப் பெண்கள் அமைப்பின் தலைவி சமன்மாலி குணசிங்க நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பெலவத்த ஜே.வி. பி. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுதந்திர பொருளாதாரக் கொள்கையே இந்த நிலைமைக்குக் காரணம். எந்த ஒரு விடயத்தையும் பணம் தீர்மானிக்கும் நிலையே நாட்டில் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் அறிக்கைகளின்படி நாளொன்றுக்கு 5 பாலியல் ரீதியிலான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகிறது. எனினும் உண்மையில் நாளொன்றுக்கு 15 சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

1990 ஆம் ஆண்டு 665 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும் 2011 ஆம் ஆண்டு 1636 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றினால் பாதிக்கப்பட்ட 89 வீதமானோர் 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என்று சமன்மாலி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக