குழந்தை பெறும் நேரத்தில் உடல் இளகி தெம்பில்லாமல் இருக்கும் அதற்கு இந்த சூப்பை செய்து தினமும் மதிய உணவிற்கு முன் குடிக்கலாம்.
இந்த சூப்பை ஒரு நாள் ஆட்டு எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும்.
தெம்பிழந்து இருக்கும் நோயாளிகளுக்கும் தினசரி இந்த சூப் கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.
பூப்பெய்திய பெண்களுக்கும் தினசரி உணவில் கொடுத்து வந்தால் இடுப்பெலும்பு பலம் பெறும்.
இதை குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால் முட்டி பலம் பெற சிக்கனில், ஆட்டுக்காலில் அல்லது மட்டனில் கொடுக்கலாம்.
சளி அதிகமாக இருந்தாலும் உடனே சரியாகும். தேவைக்கு சிறிது மிளகு கூட்டிகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில் வேக வைக்க வேண்டியது
· கறி உடைய ஆட்டு எலும்பு – ஆறு துண்டு
· வெங்காயம் – ஒன்று
· தக்காளி – ஒன்று
· இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
· உப்பு – தேவைக்கு
· மிளகு தூள் – அரை தேக்கரண்டி
· தனியாதூள் – ஒரு மேசை கரண்டி
· தேங்காய் பால் – கால் டம்ளர்
தாளிக்க
· நெய் (அ) நல்லெண்ணை – இரண்டு தேக்கரண்டி
· கரம் மாசாலா தூல் – கால் தேக்கரண்டி
· வெங்காயம் – கால்
· இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் தேக்கரண்டி
· கொத்து மல்லி தழை – கொஞ்சம்
செய்முறை
· எலும்பை கழுவி சுத்தம் செய்து முன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வேகவைக்கவும்.
· வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
· நெய்யில் தளிக்க வேண்டியவைகளை போடு தாளித்து சூப்பில் கலக்கவும்.