//]]>3

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

1000 ஆண்டுகள் பழைமை ஆன சைவ ஆலயம் - இந்தோனேசியாவில்

சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.இந்த ஆலயம்ஆண்டுகளுக்கு மேல் பழைமை ஆனது.

சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் இங்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை.இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள். 



யாழ்.சுண்டுக்குழியில் மோட்டார் விபத்து 1 வர் உயிரிளப்பு


யாழ்.சுண்டுக்குழி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பாண்டியந்தாழ்வைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் தமது மோட்டார் சைக்கிளில் அதிகவேகத்தில் சென்றதாகவும் இதன்போது வீதில் ஏற்பட்ட சறுக்கலால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாண்டியந்தாழ்வைச் சேந்த எஸ்.பிராபா சு.மயூரன் என்பவர்களே சம்பவ இடத்தில் பலியானவர்கள்

கின்னஸ்சில் திருமண ஆல்பம்


திருமண ஒப்பந்த நிறுவனமான பாரத் மேட்ரி மோனியல் சார்பில் திருமண ஆல்பம் ஒன்று தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேட்ரி மோனியல் நிறுவனரும் தலைமை செயற்இயக்குனருமான ஜானகிராம் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் திகதி மேட்ரி மோனியல் தினம் ‌கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வித்தியாசமாக கொண்டாடப்பட வேண்டு மென தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 15 பேர் ‌கொண்ட குழுவினர் சுமார் ஆயிரத்து 600 மணி நேரம் செலவழிக்கப்பட்டு இரண்டு வார கால உழைப்பில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரத் மேட்ரி மோனியல் நிறுவனம் மூலம் திருமணமானவர்கள் மட்டுமே கலந்த கொள்ள வேண்டும் என நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டது. மொத்தம் 12 ஆயிரத்து 288 ஆல்பங்கள் பெறப்பட்டு 256 ஆல்பங்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது.
16 பக்கங்களுடன் ஆயிரம் கிலோ எடையுடன் 4 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவுடன் 13 அகலம் மற்றும் 17 அடி நீளத்துடன் இந்த திருமண ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு சூன் 10ம் திகதி தயாரிக்கபட்ட ஜான்சன்ஸ் பேபி ஆல்பமே சாதனையாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.



விவாகரத்து செய்ய வேண்டுமானால் 100,000 சவுதி ரியால் நட்டஈடு




சவுதி அரேபிய - ரியாத்தில் வசித்து வரும் இலங்கை ஆண், தனது மொரக்கோன் நாட்டு மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி ஞாபக மறதி ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. 

ரியாத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் 54 வயதுடைய பியல் ரத்னபால என்ற இலங்கையர் 29 வயதுடைய சயிம் என்ற மொரக்கோன் நாட்டு பெண்ணை திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக ரியாத்தில் வாழ்ந்து வந்துள்ளார். 

குடும்பத்தில் ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக ரத்னபால தனது மொரக்கோன் நாட்டு மனைவியிடம் சமயலறை கத்தியால் பல தடவைகள் குத்து வாங்கி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

இந்த நிலையில் மனைவி மேற்கொண்ட கடும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரத்னபால வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று ஞாபக மறதி ஏற்பட்ட நிலையில் தற்போது ரியாத் இலங்கை தூதரக பாதுகாப்பில் உள்ளார். 

சில விடயங்களை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துள்ள ரத்னபால, கேள்விகள் கேட்டால் அதற்கு பதில் கூற பல விடயங்களை மறந்துவிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்து ரியாத் பொலிஸார் விசாரித்த போது தாக்குதல் நடத்தப்பட்டமையை உறுதி செய்த அப்பெண், தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாதென கூறியுள்ளார். 

இந்த நிலையில் தனது மனைவி தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது எனவும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரத்னபால குறிப்பிடுவதாக ரியாத் இலங்கை தூதரக அதிகாரி அநுர முத்துமால தெரிவித்துள்ளார். 

ஆனால் அவர் கூறுவது படி சட்டம் செயற்படாதென முத்துமால தெரிவித்துள்ளார். 

விவாகரத்து செய்ய வேண்டுமானால் தனக்கு 100,000 சவுதி ரியால் நட்டஈடாக வழங்க வேண்டும் என மொரக்கோன் மனைவியுடன் ரத்னபால ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டுள்ளதாக சவுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சாய்பாபாவின் முதலாம் ஆண்டு





புட்டபர்த்தி சாய்பாபாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது ஆசிரமத்தில் மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆன்மீக குரு சாய்பாபா.


உடல்நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு ஏப்ரல் 24ம் திகதி மரணமடைந்தார். அவரது சமாதி ஆசிரமத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
சாய்பாபாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிற 24ம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி “ஸ்ரீசத்ய சாய் ஆராதனா மகோத்சவம்” என்ற பெயரில் ஆசிரமத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
23ம் திகதி முதல் 3 நாட்களுக்கு பஜனைகள், மங்கள ஆரத்தி, ஆராதனை, கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சாய்பாபா குறித்த புத்தகமும் வெளியிடப்படுகிறது.


நினைவு தினத்தையொட்டி ஆசிரமத்தில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சத்யசாய் அறக்கட்டளை பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டு சாய்பாபா இறந்த பிறகு சத்ய சாய் அறக்கட்டளை மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.


சாய்பாபாவின் அறையில் இருந்து 11.56 கோடி பணம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டதை தொடர்ந்து, 40 ஆண்டு காலத்தில் முதல்முறையாக அறக்கட்டளையின் ஆண்டு நிதி அறிக்கை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது.

மனிதனை உண்ட மனிதர்கள்



பிரேசிலில் உள்ள கரான்கன்ஸ் நகரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 2 பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர்.

இது குறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டதால் அவர்களை பொலிசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கரான்கன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிசார், அங்கு தோண்டி பார்த்தபோது மாயமான 2 பெண்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு குடியிருந்த ஒரு ஆண் மற்றும் 2 பெண்களை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த பெண்களை கொலை செய்த நபர்கள் அவர்களின் மாமிசத்தை சாப்பிட்டு விட்டு உடலின் மீதமிருந்த பாகத்தை புதைத்தது தெரிய வந்தது. இந்த தகவலை கரான்சன்ஸ் பொலிஸ் கமாண்டர் ஒலிவெரா தெரிவித்தார்.
பெர்னாம் புகோ நகரில் ஏற்கனவே 6 பெண்கள் மாயமாகி விட்டனர். அவர்களது கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது கடத்தல், கொலை, பிணத்தை மறைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாருக்கான் என்ன பயங்கர வாதியா



அமெரிக்காவின் யேல் பல்கழைக்கழக அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா சென்றார்.
நியூயோர்க் விமான நிலையத்தில் ஷாருக்கானை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரித்தனர்.

இதையடுத்து ஷாருக்கான் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் கொதிப்படைந்த இந்திய அரச வட்டாரம் மற்றும் ரசிகர்கள் அமெரிக்காவிற்கு கண்டனங்கள் தெரிவித்தன.

சமுதாயத்தில் பிரபலமான ஒருவரை அவமதித்ததாக அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டினார்கள். இந்நிலையில் ஷாருக்கானிடம் இதுபோல நடந்து கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா நேற்று மன்னிப்புடன் வருத்தம் தெரிவித்தது.

இன்று அமெரிக்கா, ஷாருக்கானை ஒரு பயங்கரவாதி என சந்தேகப்பட்டு விசாரித்ததாக ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

புனே ஜேர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு, அகமதாபாத் 2008 குண்டுவெடிப்பு போன்ற அசம்பாவிதங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ரியாஸ் பட்கல், ஷாருக்கின் தீவிர ரசிகன் ஆவான்.

இவனைப்போன்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த சில பயங்கரவாதிகள் தன்பெயரோடு ஷாருக் பெயரையும் இணைத்துக் கொள்கின்றனர்.

இதன்காரணத்தினால் ஷாருக்கான் என்று தன் பெயரை மாற்றம் செய்து கொண்டு ஒரு பயங்கரவாதி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்ததாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவியை கற்பழித்த கும்பல் கைது



ஒடிசா மாநிலத்தில் மாணவி ஒருவர், 9 மாணவர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் குர்கேலா மாவட்டம் கதம்டோலி கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய உறவினரை பார்க்க தனது தோழிகளுடன் சென்று கொண்டிருந்தார்.


அப்போது திடீரென்று 14-17 வயதுடைய 9 மாணவர்கள் அம்மாணவிகளை வழிமறித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி மட்டும் அகப்பட்டுக்கொண்டாள்.


அவளை மாணவர்கள் ஒன்பது பேரும் மாறி மாறி கற்பழித்து சீரழித்து விட்டு தப்பிச்சென்றனர்.


பின்னர் இதுகுறித்து அம்மாணவி பொலிஸிடம் புகார் அளித்ததையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் அம்மாநில சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து பொலிஸ் சூப்பிரண்டு ஹிமான்சுலால் கூறியதாவது, சம்பவத்தன்று மாணவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததாகவும் அந்நேரத்தில் மாணவிகள் கடந்து சென்றதால் இந்த சம்பவம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.