//]]>3

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சாய்பாபாவின் முதலாம் ஆண்டு





புட்டபர்த்தி சாய்பாபாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது ஆசிரமத்தில் மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆன்மீக குரு சாய்பாபா.


உடல்நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு ஏப்ரல் 24ம் திகதி மரணமடைந்தார். அவரது சமாதி ஆசிரமத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
சாய்பாபாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிற 24ம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி “ஸ்ரீசத்ய சாய் ஆராதனா மகோத்சவம்” என்ற பெயரில் ஆசிரமத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
23ம் திகதி முதல் 3 நாட்களுக்கு பஜனைகள், மங்கள ஆரத்தி, ஆராதனை, கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சாய்பாபா குறித்த புத்தகமும் வெளியிடப்படுகிறது.


நினைவு தினத்தையொட்டி ஆசிரமத்தில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சத்யசாய் அறக்கட்டளை பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டு சாய்பாபா இறந்த பிறகு சத்ய சாய் அறக்கட்டளை மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.


சாய்பாபாவின் அறையில் இருந்து 11.56 கோடி பணம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டதை தொடர்ந்து, 40 ஆண்டு காலத்தில் முதல்முறையாக அறக்கட்டளையின் ஆண்டு நிதி அறிக்கை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக