வடமராட்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கடற்பகுதிகளிலிருந்து 1,000 படகுகளில் 5,000 மீனவர்களுடன் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதும் அவர்கள் இங்கு உள்ள கடல்வளங்களை அழிப்பதாகவும் வடமாகாண மீனவர்கள் தனக்கு எப்பொழுதும் முறைப்பாடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய மீனவர்கள் பல தடவைகள் வடமாகாண கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் கடற்பரப்பில் மோதலில் ஈடுபட்டதாகவும் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக முதலில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு தந்தி அனுப்புவதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னரே இராமேஸ்வரத்திற்கு படகுகளில் செல்லஉள்ளதாகவும் குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக