//]]>3

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கத் தயார்- Eut தளபாட நிலைய தொழிலதிபர்



போரினால் பாதிக்கப்பட்டவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு கல்வித் தகைமையை அடிப்படையில் தொழில்வாய்ப்புகள் மற்றும் தொழில் பயிற்சிகளைக் வழங்கத்; தயாராக உள்ளதாக Eut தளபாட உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய தொழிலதிபர் வே.ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் அனைத்து பிரதேச நுகர்வோரையும் இணைக்கக்கூடிய மத்திய பகுதியான சுன்னாகத்தில் இந்த தளபாட உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில,ஆண்கள் பெண்கள் என இருவரையும் இணைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டு ,பயிற்சிக் காலங்களில் 5000ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்களின் வேலைகளுக்கு ஏற்றவாறு 10,000 தொடக்கம் 25 000ரூபா வரை சம்பளம் வழங்கப்படுவதுடன், ஓய்வுதியத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் எவரும் நிலைத்து வேலை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை, படித்தவர்கள் அனைவரும் அரசாங்க வேலையை விரும்புகின்றனரே தவிர இப்படியான வேலைகளைச் செய்ய முன்வருபவர்கள் குறைவாகவே உள்ளனர்..

ஆரம்பத்தில் இங்கு மரத்திலாலான மூலப் பொருட்களை மட்டுமே கொண்டு உற்பத்திசெய்யப்பட்ட தளபாடங்கள், தற்போது மலோசியாவிலிருந்து பல வகையான பிளாஸ்ரிக், இரும்பு, அலுமினியம், போன்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தளபாடங்களை உற்பத்தி செய்யப்படுவதாகவும், 15 வருடங்களை கடந்து 20ற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட நிரந்தர ஊழியர்களுடன் சிறப்பாக செயற்படும் இந்த Eut (ஐக்கிய நம்பிக்கை உபகரணம்) நிறுனத்தின் வளர்ச்சிக்கு தான் வடிவமைப்பு மீது கொண்ட ஆர்வமே காரணம் எனவும் நிறுவனத்தின் தொழிலதிபர் வே.ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிட்டார்.

இங்கு உற்பத்திசெய்யப்படும் தளபாடங்கள் தற்போது வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Eut  தளபாடங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுவதால் அவர்களின் தேவையை புர்த்தி செய்வதே எமது கடமையாக உள்ளபோதும், மூலதனப்பற்றாக்குறை, இடவசதியின்மை, ஊழியர் பற்றாக்குறை என்பன எமக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. அத்துடன், வங்கியினால் வழங்கப்படும் கடன்கள் வியாபாரத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சிகளைக் கொடுப்பதற்குத் தயாராக உள்ளபோதும் எவரும் வேலைசெய்ய முன்வருகிறார்கள் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக