//]]>3

திங்கள், 7 மே, 2012

அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகத்திற்கு அமைச்சர்கள் விஜயம்



கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடம் வளாகத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்களும் இன்று பார்வையிட்டனர். 


மேற்படி வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் காணியை பார்வையிட்டதுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டிட புனரமைப்புப் பணிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர். 



500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் ஆராயப்பட்டது. 



இதில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் இலங்கைக்கான இந்திய பிரதி உயஸ்தானிகர் திரு.மகாலிங்கம் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 



மேற்படி புனரமைப்புப் பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி



பவுஸர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். அ{ஹங்கல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உரம் ஏற்றிச் சென்ற லொறியொன்று பவுஸரை முந்திச் செல்ல முற்பட்டபோது அவ்விரு வாகனங்களுக்கிடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. மோட்டார் சைக்கிளின் பின்னால் லொறி மோதியது. அதன்பின் பவுஸரின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பிரான்ஸின் புதிய ஜனாதி



பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் சோசலிச கட்சி வேட்பாளர் பிரன்சுவா ஒலண்ட் வெற்றிபெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 52 வீத வாக்குகளைப் ஒலண்ட் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி நிக்கோலாஷா சாகோரி ஒலண்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கடன் நெருக்கடி தொடர்பாக அரசாங்கங்களுடன் மறுபடியும் பணியாற்றுவது தொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்துவதாக ஒலண்ட் உறுதியளித்துள்ளார்.

நெற்பயிரில் வேதியியல் சாரா பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்



விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். தேவையில்லாத பொருட்களை வயலில் ஒரு ஓரமாகக் குவித்து மாலை வேளைகளில் தீ மூட்டி விளக்குப் பொறியாகப் பயன்படுத்தலாம். மேலும் அரிக்கேன் விளக்கு மற்றும் மின்சார விளக்குகளையும் பொறியாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொறிகளை மாலை ஐந்தரை மணிக்கு மேல் வயலில் வைக்க வேண்டும். தாய் அந்துப் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தினால் கவரப்படும். இந்த முறையில் தாய்ப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறிகளின் அருகில் ஒரு பெரிய தட்டு அல்லது பாத்திரத்தில் கொஞ்சம் மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் வைக்க வேண்டும்.

* மஞ்சள் ஒட்டுப்பொறி: மஞ்சள் இரும்புத்தகடு அல்லது மஞ்சள் டப்பாக்களில் ஆமணக்கு எண்ணெயை தடவி வயலில் வைக்க வேண்டும். இந்த நிறத்தினால் கவரப்படும் வெள்ளை ஈக்கள் மற்றும் தத்துப்பூச்சிகள் அந்தப் பொறிகளில் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகளை துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் எண்ணெய் தடவவேண்டும்.

* பறவை தாங்கி (பறவை ஆசனம்): நீளமான காய்ந்த குச்சிகளைக் கொண்டு "டி' வடிவ பறவை தாங்கிகளை (ஒரு ஏக்கருக்கு 15-20) வயலில் வைக்க வேண்டும். இவற்றில் பறவைகள், ஆந்தைகள் வந்து உட்கார வசதியாக இருக்கும். இவற்றில் உட்காரும் பறவைகள் வயலில் காணப்படும் புழுக்கள் மற்றும் எலிகளை உண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும்.

* கையால் சேகரித்து அழித்தல்: சாகுபடி பரப்பரளவு குறைவாக இருக்கும்பொழுது இந்த முறையைப் பயன்படுத்தலாம். பாலிதீன் பைகளில் தண்ணீருடன் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் வயல்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் முட்டைக்குவியல்களைச் சேகரித்து மண்ணெண்ணெய் சேர்க்கப்பட்ட இந்தப் பைகளில் போட்டு அழிக்கலாம். பூச்சித் தாக்குதல் குறைவாக இருக்கும்பொழுதே இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் 

ஆபாசப் படங்களில் பூஜா! அம்பலப்படுத்தியது கன்னடப் பத்திரிக்கை!



ஆபாசப் படங்களில் பூஜா நடித்துள்ளார் என்று கன்னட பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியைப்பார்த்த நாயகி பூஜா கடும் கோபத்திற்கு ஆளானார்.

இதையடுத்து தன் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளதாக அப்பத்திரிக்கை மீது பூஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுகுறித்து பூஜா, தமிழில் கடைசியாக நான் கடவுள் படத்தில் நடித்துவிட்டு இலங்கை சென்று விட்டேன்.நான் இல்லாத சமயம், கன்னட பத்திரிக்கை ஒன்று என் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளது. அப்பத்திரிக்கை மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். 

என் மீது பழி சுமத்தியவர்களை வெறுமனே விடமாட்டேன். பழிக்கு பழி வாங்குவேன் என்று ஊடக நிருபர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.தற்போது பாலாவின் “பரதேசி” என்ற புதியதொரு படத்தில் பூஜா நடித்து வருகிறார்.