//]]>3

திங்கள், 14 மே, 2012

நீரழிவு நோய்க்கு சிறந்த மருந்து அவரை



கொடிவகைகாய்களில் சிறந்தது அவரைக்காயாகும். சிக்கனமானவிலையில் நிறைந்த ஊட்டச்சத்தை இந்தஅவரைக்காய் தருகிறது.இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்துமற்றும் சில விட்டமின் சத்துகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் காய் அவரைக்காயாகும்
.
இதில் பிஞ்சுக்காயே சிறந்ததாகும். மிகஎளிதில் செமிக்கக்கூடிய காய்களில் அவரையும் ஒன்று. அதனால் பலவீனமான குடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவு நேரத்திலும் இதை உண்ணலாம்.

வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தையும் கண்டிக்கவல்லது. இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சியையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.இதை உணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும்தொல்லை, அடிக்கடி தலைநோய் வருதல், ஜீரணம் சம்பந்தப்பட்ட கோளாறு முதலியவற்றைக்கட்டுப்படுத்தும் என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.அண்மைய ஆராச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

2 தலை 6 கால் விநோத ஆமை



இரண்டு தலைகள் மற்றும் ஆறு கால்களுடன் விநோத ஆமை ஒன்று உக்ரேன் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதாகும் இவ் ஆமை ஆசிய ஆமை வகையை சேர்ந்ததாகும். தற்பொழுது இவ் ஆமை மக்கள் பார்வைக்காக உக்ரேனில் உள்ள மியூசியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் ஆமைக்கு இரண்டு தலை, இரண்டு இதயம் இருப்பதால், இவை ஒட்டிப்பிறந்த இரட்டை ஆமைகள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நயன்தாரா பண கடத்தல் விவகாரம் பீதியில் பிரபல நடிகைகள்


நயன்தாரா வெளிநாடு சென்று விட்டு திரும்பிய போது விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் ரூ.20 லட்சத்தை வெளிநாட்டுக்கு எடுத்து சென்றதாகவும்அந்த பணத்தை எதற்காக கொண்டு சென்றீர்கள் என்று அதிகாரிகள் கேள்விகளால் துளைத்ததாகவும் செய்தி வெளியானது.
40 நிமிடம் நயன்தாராவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. இது சக நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
அத்துடன் தங்கள் கணக்குகளை ஆடிட்டர் வைத்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் எப்படி முதலீடு செய்வது என்றும் விசாரித்து அறிகின்றனர்.
நடிகை திரிஷா கூறும்போது எனது பண விவகாரங்களை என் அம்மா பார்த்துக் கொள்கிறார். எதில் முதலீடு செய்வது என்பதையும் கவனமாக முடிவு செய்கிறோம். சேமிப்பு என்பது முக்கியத்துவம் அப்போதுதான் வரும் காலத்தில் இதுபோன்று வாழ முடியும் என்றார்.
நடிகை சினேகா சமீபத்தில் தனது திருமண மண்டபத்தை விற்றார். திருமண செலவுக்காக அதை விற்றதாக கூறப்பட்டது. ஆனால் சினேகா அதை மறுத்தார். வேறு காரணத்துக்காக விற்றேன் என்றார். நமீதா சம்பாத்தியம் முழுவதையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்.
அடுக்குமாடி வீடுகள் கட்டியும் விற்கிறார். கணக்கு விவகாரங்களை ஆடிட்டர் வைத்து கவனித்து கொள்கிறார்.

இரகசிய தடுப்பு முகாமின் இரகசியங்கள் திறக்கப்படுகிறதாம்



இலங்கையில் போர் முடிவுற்று 3 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், தாம் தடுத்துவைத்துள்ள போர் கைதிகள் குறித்த விபரங்களை வெளியிட தயார் என இலங்கை பாதுகாப்புச் செயலகம் முதல் தடவையாக தெரிவித்துள்ளது. 
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில், சரணடைந்த புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என செய்திகள் வெளிவந்தது அறிந்ததே 
இதில் பலர் காயங்களுடன் இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டனர். அவர்களின் நிலை என்ன ஆயிற்று என்று இதுவரை இலங்கை அரசு தெரிவித்தது இல்லை. குறிப்பான புலிகளின் மூத்த உறுப்பினர்களான பேபி சுப்பிரமணியம், யோகி, பாலகுமார் மற்றும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த கடாபி போன்றவர்களை இலங்கை அரசு என்ன செய்தது என்பது இதுவரை அறியப்படவில்லை.
இது இவ்வாறிருக்க, போரின்போது தம்மால் கைதுசெய்யப்பட்டு இரகசிய தடுப்பு முகாமில் உள்ள அனைவரது விபரங்களையும் தாம் வெளியிட தயார் என நேற்றையதினம்(ஞாயிறு) பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 
தம்மால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள், தம்மை அணுகி இவர்கள் குறித்து விபரங்களை கோரும் பட்சத்திலேயே, அந்தநபர்கள் தொடர்பான விபரங்களை தாம் வெளியிடுவோம் என கோத்தபாய தலைமையில் இயங்கும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன
எனவே இரகசிய தடுப்பு முகாமில் உள்ள நபர்களின் உறவினர்கள், தயக்கமின்றி இலங்கை அரசிடம் தமது உறவுகள் தொடர்பான விபரங்களைக் கோருவது நல்லது. இதனூடாகவே, இரகசிய தடுப்பு முகாம்களில் யார் யார் எஞ்சியுள்ளனர் என அறியமுடியும்.


வயது வந்தோருக்கான வீடியோவில் தன் மனைவி தோன்றியதால் அதிர்ந்த கணவர்!


மனைவிக்கு தெரியாமல் நெட்கஃபே களில் வயதுவந்தவர்களுக்கான வீடியோவை பார்ப்பதை வழக்கமாக கொண்ட நபர் ஒருவர், குறித்த வீடியோ ஒன்றில் தன் மனைவி தோன்றியதால் நெட்கஃபே இல் மயங்கி விழுந்த சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது.
ரமடான் என்ற நபரே குறித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தவராவார்.
இது குறித்து எகிப்த் உள்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ரமடான், தன் மனைவி அவளது காதலனுடன் உறவு கொண்ட வீடியோவை இணையதளம் ஒன்றில் பார்த்து தான் அதிர்சியடைந்ததாகவும், இது தொடர்பில் மனைவியிடம் கேட்ட போது, எனக்கு உன்னை பிடிக்கவில்லை, அவனை தான் பிடித்திருக்கிறது என்று சர்வ சாதாரணமாக பதிலளித்தது தனது 16 வருட மண வாழ்வை அர்த்தமற்றதாக்கியுள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கிழக்கு கடலில் அத்துமீறி மீன்பிடிப்பு


வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட சில தொழில்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள பிரதேச மீனவர்கள், இதற்கு கடற்படையினர் உடந்தையாக இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக்  கடற்பகுதியில் சுண்டிக்குளத்திற்கு அப்பால் கேவில் பகுதி கடற்பரப்பிற்குள் நுழையும் சிங்கள மீனவர்கள், பெருமளவில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர்.
எனினும் இது குறித்துக் கடற்படை எந்த விதமான நடவடிக்கையினையும் எடுத்திருக்க வில்லை. இந்த நிலையில் தமிழ் பிரதேச மீனவர்களின் தொழில் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது குறித்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின், மாவட்ட பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி கூறுகையில்,
கடற்றொழில் அமைச்சினால் அட்டை பிடிப்பதற்கென சில கம்பனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் எமது பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களின் அனுமதியை பெறவேண்டும். அதேபோன்று எமது பகுதி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் கூட பயன்படுத்த வேண்டும். மேலும் கரையிலிருந்து 20 கிலோமீற்றர் அப்பாலே தொழில் செய்ய முடியும், இந்த அடிப்படையில்தான் அமைச்சு அனுமதியை வழங்கியிருந்தது.
ஆனால் இதற்கு எமது பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் கடுமையாக எதிர்த்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
இதனால் அனுமதி வழங்கப்பட்ட கம்பனிகள் திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்வாறு வெளியேறியவர்களே சில தடைசெய்யப்பட்ட தொழில்களில் ஈடுபடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்றார்.

The Expendables 2 மிரட்டலான அதிரடி ட்ரெய்லர் வெளியீடு (வீடியோ இணைப்பு)



The Expendables 2, கோலிவூட்டில் தயாராகிவரும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாகும். Lions Gate Entertainment தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இத் திரைப்படத்தை Simon West இயக்குகிறார்.
வரும் ஆகஸ்ட் 17 திரையிடப்படவுள்ள இத் திரைப்படத்தில் Sylvester Stallone, Jason Statham, Jet Li,Dolph Lundgren, Chuck Norris, Randy Couture, Terry Crews, Liam Hemsworth, Jean-Claude Van Damme, Bruce Willis, மற்றும் Arnold Schwarzenegger ஆகியோர் நடித்துள்ளனர்.
நவீன ஆயுதங்களின் வெடிப்பு சத்தங்களோடு படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தில் ஜெட் லீ நடிப்பதால் மரபு ரீதியான உடல் சண்டைக்கும் குறைவிருக்காது.
இத் திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சச்சினுக்கு தங்க பேட்



சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மேற்கு வங்காள மாநில அரசும், பெங்கால் கிரிக்கெட் சங்கமும் இணைந்து பாராட்டு விழா நடத்துகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை நடக்கும் ஆட்டத்திற்கு முன்பாக இந்த விழா நடக்கிறது.
விழாவில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு டெண்டுல்கருக்கு தங்கபேட்டும், பந்தும் வழங்கி கௌரவிக்கிறார்.

ரயிலிலிருந்து பாய்ந்த காதல் ஜோடி காதலி பலி!


வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சனிக்கிழமை இரவு புறப்பட்ட புகையிரதத்தில் இருந்து காதல் ஜோடி ஒன்று பாய்ந்ததில் பெண் பலியானதுடன் ஆண் இரு கால்களையும் இழந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இரவு 11 மணிக்கு புகையிரதம் சென்றுகொண்டிருக்கும் போது இவர்கள் புகையிரதத்தில் இருந்து பாய்ந்துள்ளனர். பெண்ணின் மரணம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியை தாக்கிய ஆசிரியை கைது!


மாணவியொருவரை குடையால் தாக்கியதால் சிறுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட நாலந்த மகளீர் பாடசாலையின் ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.
சம்பவத்தில் பாடசாலையில் கல்விபயிலும் 12ஆம் ஆண்டு மாணவியே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காசோலை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்திற்கு காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் ஆசிரியை கைதுசெய்த போதிலும் இரு தரப்பினரும் சமரசம் செய்துகொண்டதை அடுத்து ஆசிரியை விடுவிக்கப்பட்டார்.

பேலிய கொடையில் விபச்சார விடுதி முற்றுகை!



கொழும்பு – பேலியகொடையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளம் பெண்கள் 6 பேரும் அவர்களை நிர்வகித்துவந்த முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 முதல் 30 வயதிற்கிடைப்பட்ட பெண்களே கைதாகியுள்ளனர். இவர்களைப் பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களிடம் 2000 முதல் 5000 ரூபா வரை அறவிடப்பட்டுவந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொடை குற்றவியல் பிரிவினரால் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட இவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பாலிவூட்டின் சிறந்த அம்மாவாக ஐஸ்வர்யாராய்



கருத்துக்கணிப்பு ஒன்று மூலம் பாலிவூட்டின் சிறந்த அம்மாவாக ஐஸ்வர்யா ராய் தேர்வாகியுள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு பாலிவூட்டின் சிறந்த அம்மா யார்? என்ற கருத்துக்கணிப்பை இந்தியாவின் பிரபல திருமண சேவை இணைய நிறுவனம் ஒன்று நடாத்தியிருந்தது.
அக் கருத்துகணிப்பின் முடிவில் சிறந்த அம்மாவாக ஐஸ்வர்யா ராய் தேர்வாகியுள்ளார். இக் கருத்துக்கணிப்பில் ஐஸ் 54 வீத வாக்குக்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் 27 வீத வாக்குக்களை பெற்று கரீஸ்மா கபூர் தேர்வாகியுள்ளார்.
ஏனைய இடங்களை 11 வீத வாக்குகளை பெற்ற மாளிகா அரோரா கான், 8 வீத வாக்குகளை பெற்ற லாரா டுட்டா ஆகியோர் பிடித்துள்ளனர்.

ஈபிள் டவர் போன்று லண்டனில் 376 அடி உயர ஒலிம்பிக் கோபுரம்



பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஈபிள் கோபுரம் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் இது அந்த நகரின் அடையாள சின்னமாகவும் விளங்குகிறது. 
அதுபோன்று லண்டன் நகரிலும் ஒரு வித்தியாசமான கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. லண்டனில் ஜூலை மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. அதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளதால் ஒலிம்பிக் கோபுரம் என அழைக்கப்படுகிறது.
376 அடி (115 மீட்டர்) உயரமுள்ள இந்த கோபுரம் சுருள் வடிவில் வித்தியாசமாக 
வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓவியர் அனீஷ்கபூர், என்ஜினீயர் சிசில் பால்மாண்டு ஆகியோர் இதை வடிவமைத்துள்ளனர். இந்த கோபுரம் 2 தலங்களை கொண்டதாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. 455 வளைவான மற்றும் சுருளான படிக்கட்டுகள் உள்ளன. இங்கு உணவகங்கள் அமைக்கப்படு கின்றன. இந்த கோபுரம் ஒலிம்பிக் விளையாட்டு மைதானம் அருகே கட்டப்பட்டுள்ளது.
எனவே, இதில் ஏறி பார்த்தால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை துல்லியமாக ரசிக்க முடியும். எனவே, இந்த கோபுரத்தில் ஏறி உள்ளே சென்று பார்க்க ரூ.1000 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த கோபுரம் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இதை பலர் ஈபிள் கோபுரத்துக்கு இணையாக பாராட்டுகின்றனர். ஒரு சிலரோ இந்த கோபுரத்தை பார்க்க சகிக்கவில்லை என அங்கலாய்க்கின்றனர்.