//]]>3

செவ்வாய், 8 மே, 2012

BBC ஊடகவியல் கல்லூரி



பிபிசி ஊடகவியல் கல்லூரியும் மற்றும் பிபிசி உலகசேவையும், ஏழு ஆசிய மொழிகளில் சிறப்பு மொழி வழிகாட்டிகளைக் கொண்டுவருவதில் பெருமையடைகின்றன. தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்காளி, பர்மிய, நேபாளி மற்றும் வியட்நாமிய மொழிகளில் இந்த வழிகாட்டிகள் தொடங்கப்படுகின்றன. 

இந்தப் புதிய வெளியீடுகள் ஏற்கனவே அரபிய, பிரெஞ்சு, சீன, பஷ்டூ, ருஷ்ய, உருது போன்ற 19 மொழிகளில் பிபிசி உருவாக்கிய வழிகாட்டிகள் பட்டியலில் இணைகின்றன. 

இந்த வழிகாட்டி பிபிசி செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி சேர்த்த திறன் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த அறிவை, உலகெங்கும் உள்ள செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். 

இந்த வழிகாட்டிகள் ஊடகவியல் என்பது எப்படி ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் மொழியைப் பற்றியதுதான் என்பதைக் கோடிட்டுக்காட்டுகின்றன. 

ஊடகவியலின் விழுமியங்களைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், இந்த விழுமியங்களை வெளிப்படுத்துவதில் மொழி வகிக்கும் பங்கை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். 

இது ஒரு முதல் படிதான். 

இந்தப் பக்கங்கள் வளர்ந்து ஊடகவியலுக்கும் மொழிக்குமான ஒரு முழுமையான வழிகாட்டிகளாக உருவெடுக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்  (BBC கல்விச்சேவை) 

கதிர்காமத்திற்கான யாத்திரைகள் வடக்கு கிழக்கிலிருந்து ஏற்பாடு




வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டிய பாத யாத்திரை வழமை போல் இம்முறையும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இம்முறை யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மே 18 இல் ஆரம்பிக்கும் பாதயாத்திரை ஜுலை 18 இல் கதிர்காமம் கொடியேற்றம் நடைபெறும் தினத்தன்று சென்றடைய விருக்கிறது.

காரைதீவைச் சேர்ந்த வேல்சாமி தலைமையில் இருமாத காலம் இடம்பெறும் இப் பாத யாத்திரை கடந்த பல வருடங்களாக வெருகல் முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.



முச்சக்கரவண்டியொன்றி 3 பேர் மாத்திரம் பயணிக்க அனுமதி



முச்சக்கரவண்டியொன்றின் பின் ஆசனத்தில் 3 பயணிகள் மாத்திரமே பயணிப்பதற்கு அனுமதிக்கும் சட்டத்தை இன்று முதல் பொலிஸ் திணைக்களம் கடுமையாக அமுல்படுத்தவுள்ளது.


வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த நடவடிக்கை உதவியளிக்குமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 7ஆம் திகதிவரையான காலத்தில் 27 முச்சக்கரவண்டி விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இவ்விபத்துக்களில் 34 பேர் பலியானதாகவும் அவர் கூறினார்.

முச்சக்கரவண்டி விபத்து ஏற்பட்டால் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சேவையில் ஈடுபடும் 67 000 முச்சக்கரவண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.