//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனம்கள் ஏலத்தில்


வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின்போது பொது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்கள் எதிர்வரும் 30 திகதிக்கு முன்னர் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ள அறிக்கையில்,
யுத்தம் காரணமாக பொது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் பெருமளவானவை யுத்தம் நடைபெற்ற பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் பெருமளவான வாகனங்கள் உரியவர்களினால் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய வாகனங்கள் கிளிநொச்சி திருநகர் பகுதியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல்வேறு இடர்பாடுகளையும் மாவட்டச் செயலகம் எதிர்நோக்கியுள்ளது.

இந்த வாகனங்கள் ஊடாக டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் இவற்றைய உரியவர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆதாரங்களைக்காட்டி பெற்றுக்கொள்ளுமாறு மாவட்டச் செயலகம் கேட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்கு முன்னர் உரிமைகோரப்படாத வாகனங்கள் அரசாங்கத்தின் நடைமுறைகளுக்கேற்ப உரிய சட்டவிதிகளின் பிரகாரம் ஏலத்தில் விற்பனை செய்யநடவடிக்கை எடுக்கபப்டும் என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக