//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

அவுஸ்திரேலியாவுக்கு போகவிருந்த 109 பேர் மட்டக்களப்பு கடலில் கைது!


சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயற்சித்த 109 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கைது செய்யப்படவர்களில் 101 தமிழர்களும் 8 சிங்களவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் செவ்வந்தி துவ எனப்படும் மீன்பிடி படகில் அவுஸ்திரேலியா நோக்கி தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், வாழைச்சேனை, கல்முனை, தலவாக்கலை, கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

கைதானவர்கள் அனைவரும் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடாத்தப்பட்டு வருவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக