//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ள சுவீடன்!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா  படையினருக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்தும் இன்னமும் அங்கு அமைதியான சூழ்நிலை தோன்றாத நிலையில் சுவீடனில் உள்ள இலங்கை யுத்த அகதிகளை இலங்கைக்கு விரைவில் திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.



இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்தத்தை காரணம் காட்டி சுவீடனில் அகதி அந்தஸ்த்து கோரிய இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற தீர்மானித்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுவீடனில் உள்ள இலங்கை அகதிகளுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து சுவீடன் அரசாங்கம் திருப்தி கொண்டதன் பின்னர், இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »