//]]>3

செவ்வாய், 15 மே, 2012

குழந்த‌ை நட்சத்திரம் தருணி விமான விபத்தில் மரணம்!



நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மட்டுமன்றி, தமிழில் அறிமுகமான குழந்தை நட்சத்திர நடிகையும் அவருடைய அம்மாவும் பரிதாபமாக மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் உள்பட விபத்தில் மரணம் அடைந்த 15 இந்தியர்களின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
நேபாளத்தில் அக்னி ஏர் என்ற தனியார் நிறுவன விமானம், பொகாராவில் இருந்து நேற்று காலை ஜோம்சாம் விமான நிலையத்துக்கு சென்றது. அங்கு விமானம் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மலை உச்சியில் மோதி கீழே விழுந்தது. 
13 இந்தியர்கள் உள்பட 15 பேர் இறந்தனர். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீகாந்த், மனைவி லதா, மகள்கள் ஸ்ரீவர்த்தினி (9), ஸ்ரீபதா (6) ஆகியோர் சுற்றுலா சென்றனர். மேலும், கும்பகோணத்தை சேர்ந்த ஆன்மீக குழுவினரும் நேபாளம் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற விமானம்தான் விபத்தில் சிக்கி நொறுங்கி உள்ளது. 
லதா, ஆன்மீக குழுவை சேர்ந்த அர்ச்சகர் சுதர்சன் பட்டாச்சாரியார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஸ்ரீகாந்த் உள்பட மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த தகவல் லதாவின் மாமனார் சீனிவாசனுக்கும், சுதர்சன் பட்டாச்சாரியாரின் சகோதரர் சவுந்தர்ராஜனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், விமான விபத்தில் தமிழ் நடிகை ஒருவரும் இறந்தது தற்போது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் படம் ‘வெற்றிச்செல்வன்Õ. இப்படத்தில் 2வது கதாநாயகியாக நடித்து வந்தவர் தருணி.
மும்பையை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் படத்தில் அறிமுகமான தருணி ஏற்கனவே மலையாளத்தில் ‘வெள்ளி நட்சத்திரம்Õ, ‘சத்யம் படங்களில் நடித்திருக்கிறார். வெற்றிச்செல்வன் படத்தின் ஹீரோயின் ராதிகா ஆப்தேவுடன் தருணி நடித்த காட்சிகள் சமீபத்தில் ஊட்டியில் படமானது. வரும் 25ம் தேதி மீண்டும் சென்னையில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் தருணி. இதற்கிடையில் நேபாளத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிட அம்மாவுடன் சென்றார். அப்போதுதான் விபத்தில் சிக்கி இறந்துள்ளார். தருணி இறந்த தகவலை வெற்றிச்செல்வன் பட இயக்குனர் ருத்ரனுக்கு, தருணியை அறிமுகம் செய்து வைத்த கோ ஆர்டினேட்டர் ருக்மணி என்பவர் இன்று காலை தெரிவித்தார். 
அதைக் கேட்டு இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். தருணி இறந்தது பற்றி இயக்குனர் ருத்ரன் கூறியதாவது: வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கின்றனர். ராதிகாவின் தோழியாக தருணி நடிக்கிறார்.
ஏற்கனவே நான் இயக்கிய விளம்பர படங்களில் தருணி நடித்திருக்கிறார். இந்தியில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன் நடித்த ‘பா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் இப்போதுதான் அறிமுகமாகிறார். சமீபத்தில் ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் தருணி கலந்து கொண்டார். ராதிகாவுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. 
எப்போதும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். ஷூட்டிங்கில் எந்த இடையூறும் செய்ய மாட்டார். சொன்ன நேரத்துக்கு ரெடியாகி வந்துவிடுவார். பூண்டு சேர்க்காமல் உணவு கொடுங்கள் என்று மட்டும் கேட்பார். 
மற்றபடி இதுவேண்டும், அதுவேண்டும் என்று பந்தா செய்ய மாட்டார். ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் காஸ்ட்யூம் ஒன்றை விரும்பி அணிவார். நேபாளத்துக்கு கோயிலுக்கு செல்ல போகிறேன். எனக்கு பிடித்த ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் அனுப்பி வையுங்கள் என்று விரும்பி கேட்டார்.

அதை பார்சலில் அனுப்பி வைத்தேன். 2 நாட்களுக்கு முன்புதான் அது அவருக்கு கிடைத்திருக்கிறது. ‘25ம் தேதி ஷூட்டிங் வந்துவிடுவேன் டிக்கெட் போட்டு வையுங்கள் என்று கூறினார். 

இதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. ஷூட்டிங் ஏற்பாடுகள் செய்து வந்தேன். இந்நிலையில்தான் தருணியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கோ ஆர்டினேட்டர் இன்று காலை எனக்கு போன் செய்து விமான விபத்தில் தருணியும் அவரது அம்மாவும் இறந்தது பற்றி தகவல் தெரிவித்தார். 

கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். தருணி நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்த நிலை யில் இறந்துவிட்டார். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை. அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறும். அதை வெட்டும் எண்ணமும் கிடையாது. இதுதான் அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு ருத்ரன் கூறினார்.

குழந்தை நட்சத்திரமான தருணி விமான விபத்தில் மரணம் அடைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் நேபாளத்துக்கு விரைந்துள்ளனர். உடல்களை சென்னை கொண்டுவர நடவடிக்கை நேபாள விமான விபத்தில் பலியான சென்னையை சேர்ந்த லதா, கும்பகோணத்தை சேர்ந்த சுதர்சன் பட்டாச்சாரியார், குழந்தை நட்சத்திரம் தருணி, அவருடைய அம்மா ஆகிய 4 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

தவிர விபத்தில் இறந்த மற்ற இந்தியர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுடைய சொந்த ஊருக்கு உடல்களை அனுப்பி வைக்க தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சல்லாப சாமியார்


மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக முடிசூட்டப்பட்டுள்ள நித்தியானந்தா தான் ஆணும் அல்ல, பெண்ணுமல்ல என்று தெரிவித்துள்ளார்.
ஆதீனத்தில் சொற்பொழிவாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா தனது சொற்பொழிவில்…
மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக என்னை நியமித்துள்ளார்கள். என்னை 

ஆதீனமாக்கியதை எதிர்த்து சிலர் போராடி வருகிறார்கள். மதுரை ஆதீனத்தை மீட்கப் போவதாகக் கூறி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
என்னை எதிர்ப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்துள்ளோம். இது குறித்து முதல்வர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வார். என்னைப் பற்றியும், மதுரை ஆதீன மடம் குறித்தும் தான் கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாக காஞ்சி ஜெயேந்திரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காஞ்சி மடத்தில் இருந்து தனது உதவியாளரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்துள்ளது அவர்களுக்கு இடையேயான பிரச்சனை. அதற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
அதனால் ஜெயேந்திரர் மீதான வழக்கை வாபஸ் பெறுவது குறித்து ரஞ்சிதா தான் முடிவு எடுக்க வேண்டும். என்னை மதுரை ஆதீனமாக்கியதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சந்திப்போம். எதிர்ப்பாளர்களின் விமர்சனங்கள் கேலிக்கூத்தானது. நான் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. ஆன்மீகமானவன். அதனால் மதுரை ஆதீன மடத்தைவிட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன். தற்போது என்னை எதிர்ப்பவர்கள் விரைவில் என்னை ஆதரிப்பார்கள் என்றார்.

தாயின் கள்ள காதலனால் மகள் 10 வருடங்களாக கற்பளிக்கப்பட்ட சிறுமி


தாயுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பை பயன்படுத்தி, குறித்த தாயின் பிள்ளை 8 வயதில் இருக்கும் போதிலிருந்து தொடர்ந்து 10 வருடமாக கற்பளித்த முன்னாள் பொலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
george gibson என்ற 43 வயதாகும் நபரே சிறுமியை கற்பளித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவராவார்.
அமெரிக்காவின் நியூயோர்கின் ஓஹியோ பகுதியை சேர்ந்தவர் 3 பிள்ளைகளுக்கு தந்தையான george gibson. இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் 10 வருடங்களுக்கு முன்னர் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவரது கள்ளக்காதலிக்கு 8 வயதில் மகள் இருதிருக்கிறாள். தாயுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பை பயன்படுத்தி குறித்த சிறுமியை கடந்த 10 வருடங்களாக கற்பளித்து வந்துள்ளார்.
தற்போது 19 வயதாகும் குறித்த சிறுமியின் முறைப்பாட்டுக்கு அமைய சிறுவர் துஸ்பிரயோக வழக்கில் george gibson ஐ கடந்த வெள்ளிக்கிழமை (4) பொலீசார் கைதுசெய்துள்ளனர்.

கள்ள காதலனுக்கு உல்லாசம் கொடுத்த பேராசிரியை கைது



ஜெரால்டு வில்லியம், 32 வயதாகும் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு கூடி, அவரை கொல்ல முயன்றுகொண்டிருந்த அவரது மனைவியான, தனியார் கல்லூரி பேராசிரியையும், அவரது கள்ள காதலனையும் மடக்கி பிடித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை யில் ஜெரால்டு வில்லியம், தனது மனைவியுடன் குடியிருந்திருக்கிறார். அவரது மனைவிக்கும் மணிகண்டன் என்ற வாலிபருக்கும் இடையில் கள்ள தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் கள்ள காதலன் மேல் கொண்ட மோகத்தால், பேராசிரியை கணவனுக்கு குளிர்பானத்தில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்கவைத்துவிட்டு, தனது கள்ள காதலனுடன் உல்லாசம் பகிர்ந்துள்ளார்.
நள்ளிரவில் மயாக்கம் தெளிந்த ஜெரால்டு வில்லியம், இவர்களின் அட்டூழியத்தை கண்டு கொதித்தெழுந்தார்.
உஷாராகிய பேராசிரியையும், அவரின் கள்ள காதலனும் அவரை கொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந் நிலையிலேயே, பொதுமக்கள் கூடியுள்ளனர். இந்த பரபரப்பால் அதிர்ந்து போன பேராசிரியை விஷத்தை குடித்துள்ளார்.
பொது மக்களால் காப்பாற்றப்பட்டு பேராசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் பாதிக்கப்பட்ட ஜெரால்டு வில்லியம் உம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
கள்ள காதலன் 15 நாள் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவையில் சிவலிங்கம் திருட்டு


பொலன்னறுவை வரலாற்றுப் சிறப்புமிக்க சிவன் கோயிலில் இனந்தெரியாத புதையல் கொள்ளையர்களால் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

புதையல் கொள்ளையர்களால் குறித்த சிவன் கோயிலில் இருந்து 4 அடி உயரமுடைய சிவலிங்கமொன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொள்ளை குறித்து விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஒரே சூழில் இரு ஆண் குழந்தைகளை பெற்ற 14 வயது சிறுமி!




மாத்தளை - கவேவெல - தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஒரே சூழில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

14 வயதுடைய குறித்த சிறுமி தான் வசிக்கும் பிரதேச இளைஞர் ஒருவருடன் காதல் புரிந்து வந்துள்ளார். 

இதனை அறிந்த பெற்றோர் அவர்களுடைய காதலுக்கு அனுமதி அளித்ததோடு இவ்விருவரையும் கணவன் - மனைவியாக வாழவும் அனுமதித்துள்ளனர். 

இதன் விளைவாக குறித்த 14 வயது சிறுமி கர்ப்பமாகி கடந்த 8ம் திகதி மாத்தளை வைத்தியசாலையில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 

பிறந்த குழந்தைகள் நிறை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விடயம் குறித்து கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் தீவிர போராட்டம்



ஊளியர் சேமலாபநிதியியை வளங்காமையாலும், 180 ஊளியர்களை வேலையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து டெனிஸ் மிதிவெடி அகற்றும் பணியாளர்கள் டெனிஸ் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தை முற்றுகையிட்டனர் 

இன்று காலை 9.30 மணிக்கு சுண்டுக்குளியில் உள்ள டெனிஸ் மிதிவெடி அகற்கும் நிறுவனத்திற்கு காலையில் பணிக்காக வந்ததும் அங்கு 180 பெயரை பணியில் இருந்து நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஊளியர்கள் தமது ஒப்பந்தக்காலம் இந்தவருடம் 6 மபதம் 31 திகதி வரை உள்ளபோது இவ்வாறு இடைநீக்குவதானால் தங்களிற்குரிய மிகுதிப்பணமும் 2 வருடங்களுக்கு மேலாக வளங்கப்படாத ஊளியர் சேமலாபநிதியினையும் வளங்கு மாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

ஆளும், எதிர் தரப்புப் பேச்சுவார்த்தை..




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று 14ம் திகதி அலரி மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சி குழுவை சந்தித்து நாட்டின் சமகால அரசியல் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 

இந்த சந்திப்பில் ஐதேக சார்பில் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க ஆகியோரும், 

அரசாங்க தரப்பு சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ், மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டனர். 

முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல சுவரொட்டிகள்



யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை மேற்கொண்டனர் .
பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்றழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் இந்த சுவரொட்டி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல!
வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்!
உரிமைக்காய் குரல் கொடுப்போம்! நீதிக்காய் போராடுவோம்!
உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை!
தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதேசத்தின் துணையோடு ஒடுக்கப்பட்ட நாள்!
என தமது விடுதலை வேணவாவை மற்றும் உணர்வை உயிரூட்டும் முகமாக சுவரொட்டிகளை வெளிப்படுத்தினர்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் சிங்கள அரசும் அதன் துணைக்குழுக்களும் முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும் பரப்புரையின் காரணமாக புலம்பெயர் மக்களின் விருப்பு மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,
விடுதலை வேண்டும் என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை நிரூபிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை தாயக உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.
கருத்துச் சுதந்திரம் பேணப்படாத நாட்டில் சிங்கள அரசின் அடாவடித்தனமான எவ்வித காட்டுமிராண்டித்தனமான விரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழின தன்மானத்தோடு தாயகத் தமிழர்களின் கருத்தை ஒருமித்து நிலைநாட்டி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை பிரநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் புலம்பெயர் ஈழத்தமிழராகிய நாம் தலைவணங்குகிறோம்.