//]]>3

செவ்வாய், 17 ஜூலை, 2012

இலங்கை இராணுவத்தினர் இராணுவ கல்லூரியில் நடைபெறும் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரியில் நடைபெறும்  கருத்தரங்கில் பங்கேற்றிருந்த இலங்கை இராணுவத்தினர் இன்று காலை மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.



இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் குன்னூர்  கருத்தரங்கில் இலங்கை படையினர் பங்கேற்க கூடாது என தமிழக கட்சிகள் அங்கு கூடி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்கக்கூடாது என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் மத்திய அரசைக் கடிதம் மூலம் கேட்டிருந்தார்.

இந்த கருத்தரங்கு நாளை வரை நடைபெறுகிறது.

இதற்கிடையில் மாநாட்டில் இருந்து விலகிய இராணுவத்தினரை  இந்தியாவில் பயிற்சி பெறாமல் நாட்டிற்கு மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என இலங்கை விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


தமிழகக் கட்சிகளான பா.ம.க நிறுவுநர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றக்கோரி தமது கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »