//]]>3

செவ்வாய், 17 ஜூலை, 2012

யாழ்ப்பாணத்தில் சம நேரத்தில் இடம்பெற்ற இரு தாக்குதல்கள்


வவுனியா சிறைக்குள் கொடூரமான முறையில் தாக்கி படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபனின் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை புதன்கிழமை நெல்லியடி பேருந்து நிலையத்தில் அமைதிவழியிலான ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்துவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கள புலனாய்வாளர்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 
 
ஏக காலத்தில் மிகத் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள் உள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பரிஸ்தமிழ்.கொம்மின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
இன்று அதிகாலை இரண்டு மணியாளவில்  ஆரம்பமான இத்தாக்குதல்களில், அகில இலங்கைத் தமிழ் கொங்கிரசின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான இராஜப்பு எட்வேட் ஆனந்தராசா அவர்களின் வடமராட்சி நெல்லியடியில் அமைந்துள்ள வீடு மோசமான தாக்குதலுக்குள்ளனது.
 
அதேவேளை, குடத்தனையிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் காண்டீபன் தங்கராஜவின் வீடும் சம நேரத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. 
 
இந்த தாக்குதலை பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ள அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாளை நடாத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தமது ஆதரவையும் தெரிவித்துள்ளன.
 
எத்தகைய உயிர்அச்சுறுத்தல்கள் தமக்கு எதிராக விடுக்கப்பட்டாலும், ஆர்ப்பாட்ட பேரணி திட்டமிட்ட முறையில் இடம்பெறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக