//]]>3

செவ்வாய், 17 ஜூலை, 2012

யாழ்.நகரில் ஆட்டோ விபச்சாரம்

யாழ்.நகரில் ஆட்டோ சேவையில் ஈடுபடும் சாரதிகளின் மூலம் அரங்கேற்றப்படும் விபச்சாரம்,காவல்துறையினர் கண்டும் காணதது போல் விட்டுவிடுகின்றார்கள்.
குறிப்பாக யாழ்.பஸ்நிலையத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் விபச்சாரம் மாலை வேளைகளில் களைகட்டிக்காணப்படுகின்றது. பஸ்நிலையத்திற்குள் நிற்கும் விலை மாதுக்களிடம் நேரடியாகவே அல்லது பஸ்நிலையத்தினைசுற்றி நிற்கும் ஆட்டோ சாரதிகளின் மூலமாகவே விலை மாதுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


இவ்விடையத்தினை தெட்டத் தெளிவாக அவதானித்துக் கொண்டுள்ள யாழ்.காவல்துறையினர் அவர்களைக் கண்டும் காணாதது போல்விட்டுவிடுகின்றார்கள்.

குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்.வருகைதரும் குறித்த விலைமாதுக்கள் இலகுவில் இவர்களுடைய உதவியுடன் தொழில் செய்துவிட்டுச் செல்கின்றார்கள்.

யாழ்.நகரத்தினை அண்மித்துள்ள விடுதிகளும் இவ்வாறானவர்களுக்கு இடமளித்து வருகின்றது. காவல்துறையுடன் தொடர்புவைத்திருக்கும் விடுதிகள் இவ்வாறான செயற்பாடுகளைச் துணிகரமாகச் செய்ய முடியும் என்னும் நிலை இங்கு உள்ளது.
குறிப்பாக யாழ்.பஸ்நிலையத்திற்குள் நேற்று மாலை 7 மணிவரைக்கும் நின்ற குறித்த ஒரு பெண் தான் கிளிநொச்சிக்குச் செல்ல வேண்டும் என்றும் பஸ்சினை தவற விட்டுவிட்டதாகவும் தெரிவித்து அங்கேயேநின்றுவிட்டு காலையில் போகப்போவதாகக் கூறி நின்றுள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அப்பகுதியல் உள்ள வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களால் காவல்துறைக்குத்தெரியப்படுத்தியதை அடுத்து அங்குவந்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த பெண் மீது சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்ததுடன் தாம் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்துகூட்டிச் சென்றுள்ளனர்.

இதுவரை அப் பெண் தொடர்பாக எந்த விதமாக முறைப்பாடுகளும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லைஎன்றும் அப்படி ஒரு பெண்னை பொலிஸார் பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து வரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக