//]]>3

புதன், 6 ஜூன், 2012

மனைவியின் உள்ளங்கவர் கள்வன் ஆக விருப்பமா?


ஆரோக்கியமான, தன்னம்பிக்கை நிறைந்த, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆண்மகனே சிறந்தவன் என்ற எண்ணம் பெண்ணுக்கு எழும். அதுபோன்ற நம்பிக்கை தரும் கணவன் அமையப்பெற்றால் அவன் சொல்லும் 
வார்த்தைகளை வேதங்களாக நினைத்து பின்பற்றுவாள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
உளவியல் நிபுணர்கள் கூறும் பின்வரும் வழிகளை பின்பற்றி பாருங்கள்…
எந்த ஒரு பெண்ணும் தனது கணவன் தனக்குரியவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்.
திருமணம் ஆன புதிதில் உங்கள் காதல் மனைவியோடு அதிக நேரம் செலவழியுங்கள். அலுவலகம் வேலை என்று இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தால் உங்கள் மனைவி தனக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டு போய்விடுவார்.
எங்காவது பொது இடத்திற்கு செல்லும் போதும் தன்னுடைய கணவன் தன்னுடைய கையை பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களாம் பெண்கள்.
புதிதாக திருமணமான உடன் எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும்.
அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.
அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் அதிகம் மகிழ்கின்றனராம்.
இது போன்ற சின்ன சின்ன விடயங்களை கவனித்து விட்டால் போதும், நீங்கள் உங்கள் மனைவியின் உள்ளங்கவர் கள்வனாக மாறலாம்…!

ஐஸ்வர்யா மீதான சந்தேகம் தீர்ந்தது? – ஸ்ருதி



3 படம் வெளியாகி, ஏகப்பட்ட சர்ச்சைகளும் எழுந்து முடிந்து ஓய்ந்து விட்டது. இந்த நிலையில் 3 படம் குறித்தும், ஐஸ்வர்யா குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
3 படத்தில் பணியாற்றும்போது ஐஸ்வர்யா மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர் இயக்கும் முதல் படம். எப்படி கையாளப்போகிறாரோ என்று எண்ணினேன். முதல்நாள் ஷூட்டிங்கில் அவர் பணியாற்றியதை பார்த்தபிறகு அவர் மீதான சந்தேகம் தீர்ந்தது. ஒரு படைப்பாளியாக அவரை ஏற்றுக்கொண்டேன்.என்று தெரிவித்தார்.
நான் காதல் வலையில் விழுந்துவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கேற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதை முதலில் எனது தந்தையிடம் சொல்வேன். இப்போதைக்கு காதல் செய்ய நேரமில்லை.என்றார் ஸ்ருதி
Pages 381234 »