எத்தியோப்பியா போன்ற அதிக வறுமை மிக்க நாடுகள் தேசிய உற்பத்தியில் 4 சத வீதத்தை கல்விக்காக ஒதுக்கும் நிலையில் இலங்கை நூற்றுக்கு இரண்டு வீதத்துக்கும் குறைவாக ஒதுக்குகின்றமை மூலம் நாட்டின் நிர்வாகத் தலைவர் கல்வித்துறை குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு தெளிவாகிறது என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்குமாறு சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை அரசை மகிழ்ச்சிப்படுத்தும் எனவும் அப்படி செய்ததன் பின் அரசாங்கமே முன்னேறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறு, 15 ஜூலை, 2012
சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் குறித்து வெறுப்படைந்துள்ள அரசாங்கத்தில் பலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில் சந்திரிக்காவின் தலையீட்டில், வெள்ளை அலரி என்ற பெயரில் ரகசியமான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)