புதன், 27 ஜூன், 2012
அவனுடைய காலை இழுத்து ஜீப்பில் ஏற்றவும் – பொலிஸ் அடாவடி
நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நுகேகொட வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க, கடந்த 21 ஆம் திகதி தலவத்துகொட – கோகந்தர வீதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸிக்கு சொந்தமான 29 ஏக்கர் காணியில் புகுந்து அதில் இருந்த கட்டடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.குறித்த கட்டடம் சட்டவிரோதமானதென தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொலிஸாரை அனுப்பி நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த அடாவடியை மேற்கொண்டுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க கட்டடத்தை இடிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது தவறு தேசிய பிக்குகள் முன்னணி
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)