//]]>3

புதன், 27 ஜூன், 2012

அவனுடைய காலை இழுத்து ஜீப்பில் ஏற்றவும் – பொலிஸ் அடாவடி


நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நுகேகொட வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க, கடந்த 21 ஆம் திகதி தலவத்துகொட – கோகந்தர வீதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸிக்கு சொந்தமான 29 ஏக்கர் காணியில் புகுந்து அதில் இருந்த கட்டடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.குறித்த கட்டடம் சட்டவிரோதமானதென தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொலிஸாரை அனுப்பி நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த அடாவடியை மேற்கொண்டுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க கட்டடத்தை இடிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்கவுடன் மோதலுக்குச் சென்றுள்ளார். இதில் கோபமடைந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ‘இவனுடைய கால்களை பிடித்து இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றுங்கள்.. என பொலிஸாரிடம் பணித்துள்ளார். உனக்கு முடிந்தால் அதனை செய்.. நன்றி கெட்டவனே என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் கோபத்துடன் கூறியுள்ளார்.
குறித்த இடம் தனது பரம்பரையால் 75 வருடங்கள் பேணப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். 88, 89 ஆண்டு காலப் பகுதியில் 35 பேரைக் கொலை செய்தவர் இந்த சுமன் எதிரிசிங்க என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக