//]]>3

புதன், 27 ஜூன், 2012

அமெரிக்காவில் விபச்சாரம் : 79 சிறுமிகள் மீட்பு


அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபட்ட 79 சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் 13 வயது முதல் 17 வயது வரையுள்ள பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் இந்த வயதுள்ள ஒரு லட்சம் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதாக சி.என்.என். தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே எப்.பி.ஐ.இ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி 79 சிறுமிகளை விபசாரத்திலிருந்து மீட்டுள்ளனர். இவர்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தெருக்களில் நின்றிருந்த 2,200 சிறுமிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக1,017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »