//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

6.5 கோடி அபராதம் செலுத்தாது தப்பிய டோனி!


டோனி மீது 6.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்கை கர்நாடகா ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

விளம்பரப்படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார் டோனி.
2006-ம் ஆண்டு கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தில் விளம்பர மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
டோனியை அந்த நிறுவனம் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே டோனி அந்த விளம்பர நிறுவனத்தில் இருந்து பாதியில் விலகி கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தோனி மீது கே.எஸ்.டி.எல். நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
விளம்பர ஒப்பந்த விதி முறைகளை டோனி மீறி விட்டதாகவும், இதனால் அவர் ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குருராஜன் இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தார். ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்தது.
ஒப்பந்தத் தொகையை முழுதும் கொடுக்காமல் அந்த நிறுவனம் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக