//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

யாழ். போதனா வைத்தியசாலையின் பழுதடைந்த பிணவறைக் குளிரூட்டி


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிணவறைக் குளீரூட்டிகள் யாவும் பழுதடைந்து விட்டதால் பிணவறையில் வைக்கப்பட்ட பெண்ணொருவருடைய சடலம் அழுகிப் பழுதடைந்துள்ளதால் வைத்தியசாலை நிர்வாகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஹன்டர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கிட்டுனர் சாந்தினி வயது 30 என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் இன்று வெளியே கொண்டு வந்தபோது தான் அது அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது பிணவறைக் குளிரூட்டிகள் நேற்று முதல் செயற்படவில்லையென்பது கண்டறியப்பட்டது.
சடலம் அழுகியதால் மரண விசாரணை அதிகாரிக்கும் உறவினர்களுக்கும் வைத்தியசாலையில் பெரும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
இதன் பின்னர் சடலம் உறவினர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக பல முறை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவிடம் எடுத்துக் கூறியும் எந்தப் பலனும் இல்லையென வைத்திசசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக