//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந்


யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் அடையாளமாக திகழும் கல்வியை போதிக்கும் தமிழர் தாயகத்தின் உயர் கல்விக் கூடமான யாழ் பல்கலைக் கழக்கத்தில் இயக்க சக்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு (11-07-2-12) அன்று நடைபெற்றது.
இன்றைய நிலையில் பல ஊடுருவல்களுக்கு மத்தியில் தமிழ் கலை பண்பாடு கல்வி மற்றும் இருப்புக்காக பாடுபடக்கூடிய ஒரே நிலையமாகவும் விடுதலை உணர்வும் உரிமைக்கான வேட்கையும் கொண்ட இளம் சமுதாயத்தை போதிக்கும் கல்விச் சாலையாகவும் பார்க்கப்படும் இவ் கல்விச்சாலையின் ஒவ்வொரு நிகழ்வும் மாணவர்களின் ஒவ்வொரு அசைவும் தமிழ் புலைமையாளர்களால் உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் மிக முக்கியமான ஒரு இயங்கு தளமாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று யாழ் பல்கலைக் கழக கலைத்துறை பட்டதாரி மாணவனும் அரசறிவியல் சிறப்புக்கலை மாணவன் தர்சானந் கடும் போட்டிக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைகாசி 2009 இன் பின்னர் உலகத் தமிழ் மக்கள் நினைவு கூரும் இனப்படுகொலை வாரத்தை நினைவு கூர்ந்து கொண்டிருந்தவேளை சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தர்சானந் உயிர் தப்பியதை நினைவு கூர்ந்த மாணவர்கள் தங்களுக்கு சிறந்த ஒரு செயற்பாட்டாளர் ஒன்றிய செயலாளராக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், தங்களது ஒத்துழைப்பை மாணவர் ஒன்றியத்துக்கு வழங்க தாம் உறுதி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இவ் ஒன்றிய உறுப்பினர் தெரிவில் விலைபோன சிலரும் குழப்பங்களை விளைவித்து மாணவர் ஒன்றியத்தை விற்க முயன்றதாகவும், அவர்களின் முயற்சி கைக்கூடாத நிலையில் மாணவர்கள் ஒன்று திரண்டு எதிரியின் திட்டத்தை முறியடித்து விலைபோனவர்களை விரட்டி செற்பாட்டாளர் ஒருவரை தெரிந்தெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக