//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

ஜனாதிபதி மஹிந்தரை கவுக்க சதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளவர்கள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளை அலரி என்ற பெயரில் ரகசியமான அமைப்பு ஒன்று உருவாக்கும் முயற்சியில் சந்திரிகா தலைமையிலான குழுவினர் முயற்சித்து வருவதாக அறிய முடிகிறது. 

இந்த புதிய அமைப்பில், பொலன்நறுவை மற்றும் பதுளை மாவட்டங்களை சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருவர் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகளும், முன்னாள் பிரதமரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள், பழைய இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

அண்மையில் பதவியை ராஜினாமா செய்த ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்றிய ஹேமகுமார நாணயக்காரவும் புதிய அரசியல் முன்னணி குறித்து அண்மையில் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, இந்த புதிய அரசியல் அமைப்பை கட்டியெழுப்ப தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக