//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

முன்னாள் போராளிகள் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான பயிற்சிக்குழாமில்


புனர்வாழ்வு பெற்றுவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 16 பேர் அடுத்த வருடம் புதுடில்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான குழாமில் பயிற்சி பெற்றுவருவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஹர்ஷா டி அபேகோன் தெரிவித்துள்ளார்.

நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, கராத்தே, கிரிக்கெட் ஆகிய போட்டிகளுக்கான குழாம்களுக்கே இவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
‘இவர்களில் ஒருவர் எல்.ரி.ரி.ஈ. சினைப்பர் குழுவில் இருந்தவர். மற்றொரு நீச்சல் போட்டியாளர் கடற்புலிகளில் அங்கம் வகித்தவர். இவர்கள் விசேட திறமையுடையவர்கள். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவர்கள்  அர்ப்பபணிப்புடன் உள்ளார்கள்’ என ஹர்ஷா டி அபேகோன் கூறினார்.
‘தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு. இவர்களில் சிலராவது இப்போட்டிகளுக்கு  தகுதி பெறுவார்கள் என நம்புகிறோம். இது தொடர்பாக அமைச்சு தன்னாலான அனைத்தையும் செய்கிறது’ என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக