//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

செல்போன் பேசினேனா? நானா? அண்ணா பாலத்தில் பஸ் கவிழ்த்த ட்ரைவர்


சில வாரங்களுக்கு முன்னதாக பிராட்வேயில் இருந்து வடபழனி சென்ற 17எம் மாநகர பஸ் அண்ணா மேம்பாலத்தில் போய்க் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்சை ஓட்டிச் சென்றதுதான் விபத்து ஏற்பட காரணம் என்பது பயணிகளில் சிலர் குற்றம் சாட்டினர். குறுகிய வளைவில் வேகமாக ஓட்டிச் சென்றதுதான் காரணம் என்று வேறு சிலர் குறை கூறினர்.

டிரைவர் பிரகாஷ் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடப்பட்டார். அவர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்தபோது, நான் செல்போனில் பேசிக் கொண்டிருக்கவில்லை. செல்போனில் பேசியபடி பஸ்சை ஓட்டிச் சென்றதாக சொல்வது தவறு. டிரைவர் சீட் பிடிமானம் இல்லாமல் ஆடிக் கொண்டிருந்தது.
பாலத்தின் வளைவில் திரும்பியபோது சீட்டின் நட்டும், போல்ட்டும் கழன்று விட்டது. இதனால் சீட் ஒரு பக்கமாக நகர்ந்ததால் நானும் ஒரு பக்கமாக சாயவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சை உடனடியாக பிரேக் போட்டு நிறுத்த முடியவில்லை. பஸ் மெதுவாக சென்றபடி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, வலது பக்கமாக கவிழ்ந்தது. பஸ் தலைகீழாக கவிழவில்லை. ஒருபக்கமாக சாய்ந்து கிடந்தது.
என்னுடைய கால்கள் கியர் வயரில் சிக்கிக் கொண்டன. சூடான ஆயில் என் கால்களில் கொட்டியது. பஸ்சை விட்டு பயணிகள் வெளியேற, ஆட்டோ டிரைவர் ஒருவர்தான் முதலில் உதவினார். நான் கஷ்டப்பட்டு உள்ளே விழுந்து கிடந்த எனது செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
கண்டக்டருக்கு என்ன ஆனதோ என்று பதட்டத்துடன் அவரை தேடினேன். அவர் ஏற்கனவே வெளியேறி பஸ்சின் அருகில் நின்று கொண்டிருந்தார். நானும், கண்டக்டரும் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று விபத்து பற்றி தகவல் தெரிவித்தோம்.
இதற்கிடையே அங்கே திரண்டு இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். தீயணைப்பு வாகனமும் சிறிது நேரத்தில் அங்கு வந்து விட்டது. கவிழ்ந்ததால் பஸ்சுக்கு சேதம் ஏற்படவில்லை. பஸ்சை தூக்கி நிறுத்த பயன்படுத்தப்பட்ட மீட்பு வாகனங்களால்தான் பஸ்சுக்கு சேதம் ஏற்பட்டது. அவை மிகவும் சிறியவை. மேலும் பழசு. பெரிய உருவம் கொண்ட பஸ்சை அந்த வாகனங்களால் தூக்கி நிறுத்துவது சாத்தியம் அல்ல.
போலீஸ் நிலையத்தில் அமர்ந்தபடி அங்குள்ள டி.வி.யில் மீட்பு பணியை பார்த்துக் கொண்டிருந்தேன். மீட்கும்போதுதான் பஸ்சுக்கு சேதம் ஏற்பட்டது. சக ஊழியர்களும், குடும்ப உறுப்பினர்களும், நான் பல உயிர்களை காப்பாற்றி விட்டதாக பாராட்டினர். பஸ் வேகமாக சென்றிருந்தால், நிச்சயம் உயிர்ப் பலிகள் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக