//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

சுற்றுலா விடுதிகளுக்கு பெண்களை விலைக்கு விற்பனை


விபசார தொழிலுக்கென சுற்றுலா விடுதிகளுக்கு பெண்களை விலைக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஆயுர்வேத பெண் வைத்தியரும் விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் இரு பெண்களும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலி மேலதிக நீதவான் குனேந்திர குமார முனசிங்க சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஹீனடிகல பகுதி ஆயுர்வேத வைத்தியரும் ரத்மக பகுதி பெண்களுமே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத வைத்தியசாலை என்ற போர்வவையில் சுற்றுலா விடுதிகளுக்குப் பெண்களை விற்பனை செய்யும் தொழிலில் இவர் ஈடுபட்டு வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் தூதுவர் ஒருவரை அனுப்பியுள்ளனர்.
அதன்படி குறித்த வைத்தியர் இரு பெண்களை முச்சக்கர வண்டியில் வரவழைத்து அவர்களை விற்பனை செய்ய முயற்சித்த போது வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்த்தன தலைமை பொலிஸ் பரிசோதகர் சதிஸ் கமகே ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தம்மிக்க ஹப்புகொட உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் பங்கு வகித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக