கோம்பாவில் 04ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து பாலியல்றீதியான துஸ்பிரயோகம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
2008ம் ஆண்டு காலப்பகுதியில் பல இடப் பெயர்வுகளை சந்தித்து முள்ளிவாய்க்கால் வரை சென்று இறுதியாக 2009ம் ஆண்டு 4ம் மாதகாலப்பகுதியில் வவுனியா செட்டிகுளம் வலயம் டீ கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தற்காலிகமாக வசித்துவந்தபோது நலன்புரி நிலையத்தில் அ.ரஞ்சித் என்ற வேலுகுமாரசாமி சரிதா வயது 21 என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் வல்லுறவுக்குற்படுத்தியுள்ளார்.
அதன் பின்; 2012.03.22ம் திகதி அன்று குறித்த பெண் தனது தாய் தந்தையுடன் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு புதுக்குடியிருப்பிற்கு சென்று தனது தாய் தந்தையுடனேயே வசித்து வந்தாலும் நலன்புரி நிலையத்திலிருந்த அ.ரஞ்சித் என்ற நபருடன் தொலைபேசியில் தொடர்பிலேயே இருந்து வந்தார்.
அப் பெண் கர்ப்பமாகியுள்ளமையை அறிந்த அந்நபர் தொலைபேசி அழைப்பை துண்டித்து பிறக்கப்போகும் குளந்தைக்கும் தனக்கும் ஒருவித தொடர்பும் இல்லையென்று கூறி குறித்த பெண்ணை விட்டு முற்றுமுழுதாக விலகிவிட்டார்.
தற்போது குறித்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார.; பிறந்த குளந்தைக்கு பெயர்சூட்டுவதற்கு தந்தை பெயர் வேண்டுமென்ற கட்டாயத்தில் குறித்த பெண்ணிண் தாய் தந்தை அ.ரஞ்சித் என்பவரிடம் சென்று மண்றாடிக் கேட்ட போதும் தனக்கு திருமண வயது வரவில்லை என்றும் குழந்தைக்கு தான்பொறுப்பு கூறமுடியாதென்றும் கூறியுள்ளார்.
இந் நிலையில் பிறந்த குழந்தைக்கு பெயர்சூட்டுவது முதல் பிறப்பத்தாட்சி பத்திரம் பெறுதல் வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக