//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

யாழில் வெறும் பத்தாயிரம் படையினரே


யாழ். குடாநாட்டில் 5 இலட்சம் பொதுமக்கள் வசித்த வருகின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக தேவைகளுக்காக 10 ஆயிரம் படையினர் மாத்திரமே நிலைகொண்டுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இந்நிலையில், யாழ் மக்கள் சனத்தொகைக்கு ஈடாக படையிர் நிலைகொண்டுள்ளனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில், இராணுவ முகாம்களுக்கு வரையறுக்கப்பட்ட நிலையிலேயே படையினர் அங்கு நிலைகொண்டுள்ளனர். அவர்களின் உதவி பொதுமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அவர்களால் சேவைகள் ஆற்றப்படும்.
தவிர, சிவில் நிர்வாக ரீதியாகவோ அல்லது வேறு எந்தவித தலையீடுகளையோ இராணுவத்தினர் செலுத்துவதில்லை. இராணுவத்தினரின் உதவிகள் நாடப்படும் பட்சத்தில் அவர்கள் சேவையை வழங்குவர் என்றும் இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக