//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

திருமணத்துக்கு மறுத்த காதலனை போராடி மணந்த கல்லூரி மாணவி


குமரி மாவட்டம் மேல் புறத்தைச் சேர்ந்தவர் அனிதா (வயது 21). கல்லூரி மாணவி. இவரும், அருமனை அருகே உள்ள முக்கூட்டுக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான சாஜனும் (25) காதலித்தனர். திருமண ஆசை காட்டி அனிதாவுடன் ஜாலியாக இருந்த சாஜன் அவரை திருமணம் செய்ய மறுத்தார். இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்தி சாஜன் வீட்டு முன்பு அனிதா கடந்த 7-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது சாஜனும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டு இருந்தது. சாஜனை திருமணம் செய்து கொள்ளும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என அனிதா உறுதியாக இருந்தார். நேற்று 4-வது நாளாக அவரது போராட்டம் நீடித்தது.
அனிதாவுக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். அனிதா பிரச்சினையில் போலீசார் தலையிட்டு சாஜனுடன் சேர்த்து வைக்கா விட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் குதிப்போம் என அந்த பகுதி அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, ஜனதா தள நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்தநிலையில் அனிதா வின் போராட்டத்திற்கு நேற்று மாலை வெற்றி கிடைத்தது. தலைமறைவாக இருந்த சாஜன் திரும்ப வந்தார். அப்போது ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் அனிதாவை திருமணம் செய்து கொள்ள சாஜன் சம்மதித்தார்.
இதையடுத்து அனிதா தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். பின்னர் இருவரும் பொது மக்கள் முன்னிலையில் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர். மன உறுதியுடன் போராடி காதலில் வெற்றி பெற்ற அனிதாவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக