இலங்கையில் முதலாவது மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளும் திட்டம் இறுதிவடிவத்திற்கு வந்துள்ளதாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக வியாங்கொடையிலிருந்து களுத்துறை வரைக்கும் மின்சார ரயில் சேவையினை ஆரம்பித்து இயக்கவுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்கள திட்டப் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தள்ளார். இதற்காக இரண்டு மின்சார உப நிலையங்களை றாகம மற்றும் பாணந்துறையில் நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் சொகுசு மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக