//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

ஓட்டோவில் எருமை! கடத்தல்

முச்சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட எருமை மாட்டினை நேற்று இரவு வீதிப்போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கர வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். 


அண்மைக்காலமாக இறைச்சிக்காக எருமை மாடுகளை சட்டவிரோதமாக கடத்தும் சில கும்பல்கள் அதற்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் நிலையில் முச்சக்கர வண்டியில் எருமையினைக் கடத்திய விசித்திரம் நிகழ்ந்துள்ளது. முச்சக்கர வண்டியின் பின்புறம் பலவந்தமாக ஏற்றப்பட்டு அடைக்கப்பட்ட எருமை மாடு வெளியே தெரியாதவாறு இருப்பதற்காக மழைக்காக பயன்படுத்தும் ஓட்டோவின் பக்கவாட்டு தறப்பாள்களை மூடிகொண்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அனுராதபுரம் - புத்தம் ஏ12 nடுஞ்சாலையில் பயணித்த மேற்படி முச்சக்கரவண்டியை வீதி பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டபோது அதனுள்ளே எருமைமாடு ஒன்று நின்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையின்போது சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எருமைமாடு என்பதனை அறிந்த பொலிஸார் குறித்த முச்சக்கர வாகனத்தை கைப்பற்றியதுடன் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக