//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

மனநலம் குன்றிய பிள்ளைகள் பிறப்பதை கணிக்க முடியுமா?



மனநல‌ம் கு‌ன்‌றிய குழ‌‌ந்தைக‌ள் ‌பிற‌ப்பை ஜாதகத்தில் முற்கூட்டியே க‌ணி‌க்க இயலு‌ம்.

5ஆம் இடம்தான் மனப்பான்மை. மனத்திற்குரிய இடம். இரண்டு பேருக்குமே 5ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும்.
5ஆம் இடத்தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம். அதற்காகத்தான் மனம்போல் மாங்கல்யம் என்று கூறுகிறார்கள். நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆவாய் என்று சொல்வார்கள். மனம்போல் ஆகட்டும் என்று சித்தர்கள் வாழ்த்து கூறுவா‌ர்க‌ள்.
மனதை ஆளும் கிரகம் சந்திரன், மனோகாரன். 5ஆம் இடத்தில் பாவகிரகம் அமர்ந்து, 5க்குரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்து, சந்திரன் வலுவிழந்து காணப்பட்டால் மனநலம் குன்றிய குழந்தைகள் பிறக்கும்.
அதேப்போல் முதல் குழந்தையை, தாய் தந்தையின் ஜாதகத்தை வைத்து அறிகிறோம். இரண்டாவது குழந்தையைப் பற்றி பார்க்கும்போது முதல் குழந்தையின் ஜாதகத்தையும் பார்க்க வேண்டும். முதல் குழந்தையின் 3ம் இடம்தான் இளைய சகோதர, சகோதரிக்கான இடம். அதாவது, 3ம் இடம் வலுவிழந்து, 3ம் இடத்திற்குரிய கிரகம் வலுவிழந்தாலோ உடல் அல்லது மன வளர்ச்சி குன்றிய சகோதரனோ, சகோதரியோ பிறக்கும்.
எனவே பொருத்தம் பார்க்கும்போது ஏனோ தானோவென்று பார்க்காமல் தினப்பொருத்தம், கனப்பொருத்தம் மட்டும் பார்த்துவிட்டு 8 பொருத்தம் இருக்கிறது எ‌ன்று ‌திருமண‌ம் செ‌ய்யாம‌ல், நடத்தை ஸ்தானம், குழந்தை ‌ஸ்தானம், வருஷ தசைகள் என அனைத்தையும் பார்த்து பொருத்தம் தீர்மானிக்க வேண்டும்.
5ம் இடம் சிறப்பாக இருந்தும் மனநல‌ம் குன்றிய குழந்தைகள் பிறக்க வா‌ய்‌ப்பு‌ண்டு. அதற்கு இருவருக்குமே ஒரே நேரத்தில் ஒரே தசை நட‌ப்பதுதா‌ன் காரண‌ம். அதாவது இருவருக்குமே சனி தசை அல்லது புதன் தசையே நடந்தால் அப்போது பிறக்கும் குழந்தை மனநலம் குன்றிப் பிறக்க வாய்ப்புண்டு. அதற்கு இருவருக்கும் தசா சந்தி நடக்காமல் பார்க்க வேண்டும்.
ஒரே நேரத்தில் ஏழரை சனி வரக்கூடாது. அஷ்ட தசை வரக்கூடாது. ஒருவருக்கு கேது, மற்றொருவருக்கு ராகு தசை வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பார்த்து திருமணம் செய்து வைத்தால் அழகான அறிவான குழந்தைகள் பிறக்கும். இப்படி ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் அறிவாளிப் பிள்ளைகள் பிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக