குறித்த மாவட்டங்களில் தலா ஒரு கிராமம் வீதம் தெரிவு செய்யப்பட்டு இன்று பிற்பகல் மூன்று மணியளவில் ஒத்திகை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.
சுனாமிப் பேரலை ஏற்படுகின்றபோது பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் விரைந்து செல்வது தொடர்பாக அறிவூட்டலை வழங்கும் வகையில் இன்றையதினம் முன்னெச்சரிக்கை ஒத்திகை நடைபெறவுள்ளது.
மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒத்திகைக்காக முன்னெச்சரிக்கை சமிஞ்சைகள் செயற்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் மக்கள் அநாவசியமாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இன்றைய சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைக்கு அனைத்துத் தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக