//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

பர்மாவில் 90,000 பேர் இடம்பெயர்வு!


பர்மாவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Rakhine என்னும் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பௌத்த மத பெண் ஒருவரை மூன்று இஸ்லாமியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததனைத் தொடர்ந்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
இரண்டு இனச் சமூகங்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு உணவு மற்றும் ஏனைய நிவாரணங்களை வழங்கி வருகின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் மறுப்பது சர்வதேச சட்ட மீறலாகும் என மனித உரிமை அமைப்புக்கள் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக