காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் யுத்தத்துக்காகவே நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்தப் போரில் பாகிஸ்தான் விலக நேர்ந்தால் எங்களது போரானது பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சலாலுதீன்…
காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் யுத்தத்துக்காகவே நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்தப் போரில் பாகிஸ்தான் விலக நேர்ந்தால் எங்களது போரானது பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக நடத்தப்படும்.
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் பல சுற்று அமைதிப் பேச்சுகளை நடத்தி வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்துக்கு ஆயுதவழிப்பட்ட தீர்வுதான் சரியானதாக இருக்கும். இதனால் பாகிஸ்தானும் இந்தியாவும் நடத்துகின்ற அமைதிப் பேச்சுகளை நாங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸாதான் இதுவரை மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தானின் இந்த புதிய நிலைப்பாடு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை காயப்படுத்துவதாக உள்ளது.
ஈராக்கிலும் ஆப்கானிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தியா படைகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன? இந்த வகையில் காஷ்மீரில் இருந்து இந்தியப் படைகள் தானாகவே விலக வேண்டிய நிலைமை ஏற்படும்.என தெரிவித்துள்ளார்.
இது போன்ற தீவிரவாத அமைப்புக்களின் எச்சரிக்கைகளுக்கு அடிபணியாது சமாதான போக்கை கடைப்பிடித்தால் தான் நாட்டுக்கு நன்மை விளையும் என்பதை பாகிஸ்தான் அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக