//]]>3

வெள்ளி, 8 ஜூன், 2012

கமலின் விஸ்பரூபம் – என்ன கதை? (ட்ரெய்லர் இணைப்பு)


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் கமலின் திரைப்படம் ”விஸ்பரூபம்”. அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதை குறித்து கமல்ஹாஸன் கூறுகையில்…
“விஸ்வரூபம் என்மனதிலும் என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
கதை என்ன?
அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை மனைவியின் தொந்தரவின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத்.
ஆனால் நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள்.
அதன் பின்னர் ஏற்படும் வில்லங்கங்களின் தொகுப்பு தான் இந்த விஸ்பரூபம்!
ம்ம்…. விஸ்பரூபத்தை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு காத்திருப்போம்…!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக