//]]>3

வெள்ளி, 8 ஜூன், 2012

தவமிருக்கும் வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகை சமந்தா



புகழ் பூத்த இயக்குனர்களில் மணிரத்தினமும் ஒருவர். இன்றைய பல நடிகைகளின் கனவே, மணிரத்தினத்தின் படம் ஒன்றில் நடித்துவிடவேண்டும் என்பதுதான்.
அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்தும், அதை தூக்கி எறிந்துள்ளார் நடிகை சமந்தா.
பலத்த எதிர்பார்ப்ப எற்படுத்தியுள்ள மணிரத்தினத்தின் ”கடல்” திரைப்படத்தில் சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார்.
கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று பேட்டி அளித்திருந்தார்.
ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார்.
மணிரத்தினம் விலக்காத நிலையில் தானாகவே சமந்தா இவ் அரிய வாய்ப்பை தூக்கி எறிந்தது தொடர்பில் கோடம்பாக்கத்தில் மர்மம் நிலவுகிறது…!
தானாக விலகினாரா, இல்லை வற்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »