//]]>3

திங்கள், 2 ஜூலை, 2012

70 ஓட்டங்கள் இலங்கைக்கு போட்டி மழையால் இடைநிறுத்தம்


பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணியின் இன்றைய போட்டி மழையால் இடைநிறுத்தப்பட்டது. 551 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுள்ளது. 


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டது. இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 488 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

தொடக்க வீரர் மொகமது ஹபிஸ் 4 ஓட்டங்களில் இரட்டை சதத்தை தவறவிட்டு 196 ஓட்டங்களும், அசார் அலி சதம் கடந்து 157 ஓட்டங்களும் எடுத்தனர்.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 551 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இலங்கை சார்பில் ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 551 ஓட்டங்கள் இலக்குடன் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. 

தொடக்க வீரராக களமிறங்கிய தரங்கா பரணவிதா ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டில்சான் 46 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய குமாரா சங்கக்காரா 22 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

மழையால் இன்றைய போட்டி நிறுத்தப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 481 ஓட்டங்கள் இலக்குடன் நாளை துடுப்பெடுத்தாட உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக