//]]>3

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் பிரிவினை



ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் பிரிவினையை தூண்டிவிட அரசாங்கத்தினால் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முதற்கட்ட நடவடிக்கையினை இன்று யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்புடன் ஆரம்பித்துள்ளார்.

ஸ்ரீதர் தியேட்டரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் மேற்குறித்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்திற்குப் பல தடவைகள் மீனவர் பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் யாழ்.வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடமும், மகஜர் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்திய அரசாங்கத்திற்கு தந்தியொன்று நான் அனுப்பவுள்ளேன். அதனையும் அரசாங்கம் நிராகரித்தால் இராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சகோதரப் படுகொலைகளை நிறுத்துமாறு தான் பிரபாகரனிடம் கேட்டதாகவும் ஆனால் அவர் தன்னை துரோகிகள் பட்டியலில் முதல்வரிசையில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்ததுடன், நான் உயிருடன் இருக்கையில் தான் இறப்பேன் என பிரபாகரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். எனவும் தெரிவித்தார்.

இதற்கு புலிகளின் முன்னாள் ஊடக பிரிவு பொறுப்பாளர் தயா மாஸ்டர் புன்னகைத்தபடி ஆமாம் என தலையசைத்தார். தொடர்ந்து புலிகள் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்கவில்லை என டக்ளஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக